முகப்பு /செய்தி /ராணிப்பேட்டை / படிக்கட்டு பயணத்தால் சண்டை.. டிரைவரை தாக்கி ரத்தம் சொட்ட வைத்த மாணவன்..!

படிக்கட்டு பயணத்தால் சண்டை.. டிரைவரை தாக்கி ரத்தம் சொட்ட வைத்த மாணவன்..!

டிரைவரை தாக்கிய மாணவன்

டிரைவரை தாக்கிய மாணவன்

ராணிப்பேட்டையில் பேருந்தின் படிக்கட்டில் தொங்கியதை தட்டிக்கேட்ட ஓட்டுநரின் முகத்தில் 11-ம் வகுப்பு மாணவன் குத்தியதில், ஓட்டுநரின் நெற்றியில் இருந்து ரத்தம் கொட்டியது. தாக்குதல் சம்பவத்தின் பின்னணி என்ன?

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Ranipettai (Ranipet), India

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் இருந்து அரக்கோணம் நோக்கி நேற்று முன் தினம் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்தின் ஓட்டுநராக பாலாஜி இருந்தார். பாண்டியநல்லூர் பஞ்சாயத்து போடப்பாறை அருகே வந்தபோது, பேருந்தில் 11ம் வகுப்பு பள்ளி மாணவன் ஒருவன் படியில் தொங்கியவாறு பயணித்துள்ளார். இதனை கண்ட ஓட்டுநர் பாலாஜி, மாணவனை கண்டிக்க ஆத்திரமடைந்த மாணவன் திடீரென ஓட்டுநரை கண்மூடித்தனமாக தாக்கினார்.

பேருந்து ஓடிக் கொண்டு இருக்கும்போதே மாணவன் தாக்கியதால் செய்வதறியாது திகைத்தார் ஓட்டுநர். மாணவன் கையில் ஏதோ ஒரு பொருளை வைத்து தாக்கியதில் ஓட்டுநரின் நெற்றி உடைந்து ரத்தம் கொட்டியது. அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்ற மாணவனை பயணிகள் பிடித்து வைத்தனர். பின்னர் பேருந்தை ஓரமாக நிறுத்திய ஓட்டுநர் பாலாஜி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் வரும் வரை மாணவன் தப்பி செல்லக்கூடாது என்பதற்காக அவரது சட்டையை பிடித்தும் வைத்துக் கொண்டார் ஓட்டுநர் பாலாஜி.

' isDesktop="true" id="892106" youtubeid="Dy9L6IRbHpU" category="ranipet">

ரத்தம் சொட்ட சொட்ட நிற்கும் அரசு பேருந்து ஓட்டுநரை பயணிகள் செல்போனில் வீடியோ எடுத்தனர். மேலும் இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவ, மாணவன் படித்த பள்ளி மற்றும் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சம்பவ இடத்திற்கு வந்த சோளிங்கர் போலீசார் மாணவனை பிடித்து அழைத்து சென்றனர். மேலும் மாணவனின் பெற்றோரை வரவழைத்து எச்சரித்தனர்.நெற்றியில் இருந்து ரத்தம் வடிந்த நிலையில் இருக்கும் அரசு பேருந்து ஓட்டுநரின் வீடியோ, அரசு பேருந்து பணியாளர்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

First published:

Tags: Crime News, Local News, Ranipettai, Student