ஹோம் /நியூஸ் /ராணிப்பேட்டை /

2வது பிரசவத்துக்காக பிறந்த வீடு சென்ற மனைவி.. உணவு கொண்டுவந்த சிறுமியை கர்ப்பமாக்கிய கணவன்!

2வது பிரசவத்துக்காக பிறந்த வீடு சென்ற மனைவி.. உணவு கொண்டுவந்த சிறுமியை கர்ப்பமாக்கிய கணவன்!

கைது செய்யப்பட்ட சலீம் பாஷா

கைது செய்யப்பட்ட சலீம் பாஷா

சிறுமிக்கு அதிக வயிற்று வலி ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்து சென்ற போது, 6 மாத கர்ப்பமாக உள்ளதை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ranipettai (Ranipet), India

ராணிப்பேட்டை அருகே மனைவி 2-வது பிரசவத்திற்காக அம்மா வீட்டிற்கு சென்ற சமயத்தில், உணவு கொடுக்க வந்த உறவுக்கார  சிறுமியை மிரட்டி கர்ப்பமாக்கிய நபரை போக்சோ சட்டத்தின் கீழ்  போலீசார் கைது செய்தனர்

ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் அருகே உள்ள அம்சா நகர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சலீம் பாஷா(24). அதே பகுதியில் கட்டிடங்களுக்கு பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில், மனைவி 2-வது பிரசவத்திற்காக அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த நேரத்தில் அதே பகுதியில் உள்ள சலீம் பாஷாவின் உறவினர்கள் அவருக்கு தேவையான உணவை 14 வயது சிறுமியிடம் நாள்தோறும் கொடுத்து அனுப்பியுள்ளனர். இந்த நேரத்தை பயன்படுத்தி சலீம் பாஷா சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

சிறுமிக்கு அதிக வயிற்று வலி ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு பெற்றோர்கள் அழைத்து சென்ற போது, 6 மாத கர்ப்பமாக உள்ளதை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சிறுமியிடம் விசாரித்த போது உண்மை தெரியவரவே, சிறுமியின் பெற்றோர் போலீசாரில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் சலீம் பாஷாவை கைது செய்த ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார், அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து வேலூர் மகிலா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையிலடைத்தனர்.

First published:

Tags: POCSO case, Ranipettai