ஹோம் /நியூஸ் /Ranipet /

மனைவி ஆசைக்கு இணங்க மறுத்ததால் பச்சிளம் குழந்தையை கொன்ற கொடூரம் - அரக்கோணத்தில் அதிர்ச்சி சம்பவம்

மனைவி ஆசைக்கு இணங்க மறுத்ததால் பச்சிளம் குழந்தையை கொன்ற கொடூரம் - அரக்கோணத்தில் அதிர்ச்சி சம்பவம்

பச்சிளம் குழந்தை கொலை

பச்சிளம் குழந்தை கொலை

மனைவி ஆசைக்கு இணங்க மறுத்த ஆத்திரத்தில் குழந்தையை தந்தையே கொன்ற போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

   அரக்கோணம் அருகே பிறந்து 40 நாட்களே ஆன ஆண்குழந்தை பெயிண்ட் பக்கெட் நீரில் மூழ்கடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக  மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த  தோல்ஷாப் பகுதியை சேர்ந்த மனோ( வயது 22). இவரது மனைவி அம்சநந்தினி(வயது 20).  இருவருக்கும் திருமணம் முடிந்து 3 ஆண்டுகள் முடிந்த நிலையில், யுவன் என்ற ஆண்குழந்தை கடந்த 40 நாட்கள் முன் பிறந்துள்ளது. குழந்தையின் தந்தையான மனோ சென்னை திருநின்றவூரில் பூக்கடையில் வேலை செய்து வருகிறார். வேலைக்கு சென்றுவிட்டு வீடுதிரும்பிய மனோவும் அவரது மனைவியும் நேற்று இரவு உறங்கிக்கொண்டிருந்தனர்.

  அப்போது 2 மணியளவில் அம்சநந்தினி அருகே இருந்த குழந்தை காணாமல் போனதாக கூறப்படுகிறது. குழந்தையை காணவில்லை என்று அம்சநந்தினி அலறி அழுத நிலையில் வீட்டில் அனைத்து இடங்களிலும் தேடியுள்ளனர். பின்னர் வீட்டின் குளியலறையில் 20 லிட்டர் பெயிண்ட் பக்கெட்டில் உள்ள நீரில் குழந்தை தலைகீழாக இருப்பது தெரியவந்தது.

  இதைத்தொடர்ந்து அரக்கோணம் நகர காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததன் பேரில் குழந்தையை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை செய்ய கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து அரக்கோணம் நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

  விசாரணையில்  தந்தையான மனோ குழந்தையை கொன்றது தெரியவந்துள்ளது.  இரவு குடிபோதையில் மனைவியுடன் கணவன் படுக்கச் சென்றதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். குடிபோதையில் இருந்த ஆத்திரத்தில் பிறந்து 40 நாட்கள் ஆன பச்சிளம் குழந்தையை எடுத்துச்சென்று நீர்நிறைந்த பக்கெட்டியில் குழந்தையை அமுக்கி மனோ கொலை செய்ததாக அரக்கோணம் டிஎஸ்பி புகழேந்தி கணேஷ்  மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

  செய்தியாளர் : க.சிவா (ராணிப்பேட்டை)

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Child murdered, Crime News, Death, Infant, Police