ஹோம் /நியூஸ் /ராணிப்பேட்டை /

கர்நாடகா டூ தமிழ்நாடு.. சொகுசு காரில் 120 கிலோ குட்கா.. பிரபல கடத்தல் மன்னன் கைது!

கர்நாடகா டூ தமிழ்நாடு.. சொகுசு காரில் 120 கிலோ குட்கா.. பிரபல கடத்தல் மன்னன் கைது!

கர்நாடகா டூ தமிழ்நாடு.. சொகுசு காரில் 120 கிலோ குட்கா.. பிரபல கடத்தல் மன்னன் கைது!

பிரபல குட்கா கடத்தல் வியாபாரியான கால்சிங், பெங்களூருவிலிருந்து ஹான்ஸ் மற்றும் குட்கா பொருட்களை மொத்தமாக கடத்தி வந்து விற்பனை செய்து வருகிறார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ranipettai (Ranipet), India

கர்நாடகாவிலிருந்து சொகுசு காரில் 120 கிலோ குட்கா போதைப்பொருட்களை கடத்தி வந்த பிரபல கடத்தல் மன்னன் கால்சிங் போலீசாரிடம் சிக்கியுள்ளார்.

3 மாதங்களுக்கு முன் கடத்தல் வழக்கில் சிக்கி சிறை சென்று வந்த கால்சிங் மீண்டும் 120 கிலோ குட்கா கடத்தி கைதாகியுள்ளார். வாலாஜாப்பேட்டை அருகே ஜோதிராவ் தெருவை சேர்ந்த இளைஞர் 22 வயதான கால்சிங். பிரபல குட்கா கடத்தல் வியாபாரியான இவர், பெங்களூருவிலிருந்து ஹான்ஸ் மற்றும் குட்கா பொருட்களை மொத்தமாக கடத்தி வந்து விற்பனை செய்து வருகிறார். இவர் மீது ஏற்கனவே ஏராளமான குட்கா கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், 120 கிலோ ஹான்ஸ் கடத்தப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

வாலாஜாபேட்டை போலீசார் ஆய்வு மேற்கொண்டபோது, பிரபல குட்கா கடத்தல் மன்னன் கால்சிங் பெங்களூருவிலிருந்து காரில் வருவது தெரியவந்தது. சந்தேகத்தின் பேரில்,

கால்சிங்கின் காரை மடக்கி சோதனை செய்த போது அதில் 120 கிலோ குட்கா இருப்பது தெரியவந்தது.கால்சிங்கை கைது செய்து செய்த போலீசார், ஹான்ஸ் பாக்கெட்டுகளையும், காரையும் பறிமுதல் செய்தனர். 3 மாதங்களுக்கு முன்பு கர்நாடக மாநிலத்தில் இருந்து கால் சிங் இதேபோல் குட்காவை கடத்தி வந்துள்ளார்.

பெங்களூருவிலிருந்து சோதனைச் சாவடிகள் இல்லாத குறுக்கு வழியில் சுமார் 120 கிலோ குட்காவை கடத்தி வந்துள்ளார். வாலாஜாபேட்டை பகுதியில் உள்ள அவரது மொத்த விற்பனை கடையில் 120 கிலோ குட்கா பொருட்களையும் அவர் பதுக்கி வைத்திருந்தார். அப்போதே அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அதன்பிறகு சிறையிலிருந்து வெளியே வந்தவர் மீண்டும் தனது கைவரிசையை காட்ட ஆரம்பித்து சிக்கியுள்ளார். சந்தேகம் ஏற்படாத வகையில் சொகுசுக்கார்களில் குட்கா கடத்தி வந்த கால் சிங்கை போலீசார் தொடர்ந்து கண்கணித்து வந்தனர்.

அவரது வாகனத்தை திடீர் சோதனை செய்தபோது மீண்டும் சிக்கியுள்ளார். கைது செய்யப்பட்ட கால்சிங்கை வாலாஜாபேட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்

First published:

Tags: Banned Pan Gutka, Karnataka, Smuggling