Home /News /ranipet /

பள்ளி மாணவர்களை கட்டாயப்படுத்தி ஓரினசேர்க்கையில் ஈடுபடுத்திய கட்டிட மேஸ்திரி போக்சோவில் கைது!

பள்ளி மாணவர்களை கட்டாயப்படுத்தி ஓரினசேர்க்கையில் ஈடுபடுத்திய கட்டிட மேஸ்திரி போக்சோவில் கைது!

நரேஷ் குமார்

நரேஷ் குமார்

மாணவர்களை வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்தபோது, மாணவர்கள் பாலியல் வன்முறைக்கு ஆளானது உறுதியானது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ranipettai (Ranipet), India
    7ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களை கட்டாயப்படுத்தி ஓரினசேர்க்கையில் ஈடுபடுத்திய கட்டிட மேஸ்திரியை காவேரிப்பாக்கம் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 7ஆம் வகுப்பில் மாணவர் ஒருவர், சில நாட்களுக்கு முன்பு பள்ளி இடைவேளை நேரத்தின் போது சிறுநீர் கழிக்க பக்கத்தில் உள்ள கட்டிட பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த கட்டிட மேஸ்திரி நரேஷ் குமார்(23) என்பவர், அந்த சிறுவனின் வாயை பொத்தி அருகில் உள்ள வாழைத்தோட்டத்துக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

    அதேபோல் அதே பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கும் மற்றொரு மாணவர் பள்ளி நேரம் முடிந்து அருகில் உள்ள இடத்தில் மாடு கட்டுவதற்காக சென்று உள்ளார்.  அப்போது அங்கிருந்த நரேஷ் குமார் பள்ளி மாணவனை வலுக்கட்டாயமாக மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளார். இந்த 2 மாணவர்களும் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு உள்ளனர்.

    இதையும் வாசிக்க: போதை மாத்திரைகள் வீட்டுக்கே டோர் டெலிவரி.. Zomato ஊழியர் சிக்கியது எப்படி?

    மாணவர்களின் பெற்றோர்கள் விசாரித்ததில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தங்களிடம் தவறாக நடந்து கொண்டதாக தெரிவித்தனர். மேலும் மாணவர்களை வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்தபோது, மாணவர்கள் பாலியல் வன்முறைக்கு ஆளானது உறுதியானது. இதைத்தொடர்ந்து மாணவர்களின் பெற்றோர்கள் காவேரிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    அதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் மாணவர்களிடம் பாலியல் வன்முறையில் ஈடுபடுத்தியது மேஸ்திரி நரேஷ் குமார் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து காவல்துறையினர் அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

    - சிவகருணாகரன், செய்தியாளர்
    Published by:Siddharthan Ashokan
    First published:

    Tags: Crime News, Pocso, Ranipettai

    அடுத்த செய்தி