ஹோம் /நியூஸ் /ராணிப்பேட்டை /

லாரியை நிறுத்துவதில் தகராறு... ஆத்திரத்தில் இருவரை ஓட ஓட வெட்டி கொன்ற லாரி டிரைவர்!

லாரியை நிறுத்துவதில் தகராறு... ஆத்திரத்தில் இருவரை ஓட ஓட வெட்டி கொன்ற லாரி டிரைவர்!

லாரி டிரைவர் நிர்மல், கொலை செய்யப்பட்ட மெக்கானிக்

லாரி டிரைவர் நிர்மல், கொலை செய்யப்பட்ட மெக்கானிக்

மதுகுடித்துக்கொண்டிருந்த சரவணன் தனது கடை வாசலில் நிறுத்திய லாரியை எடுக்க கூறியுள்ளார். சிறிது நேரத்தில் எடுத்துவிடுவதாக நிர்மல் கூறியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ranipettai (Ranipet), India

லாரியை நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில், மதுபோதையில் இருந்த இருவரை லாரி டிரைவர் ஒருவர், ஓட ஓட வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் டி-புதூர் பகுதியை சேர்ந்தவர் 27 வயதான நிர்மல். இவர் சரக்குலாரி ஓட்டிவந்துள்ளார். புத்தாண்டு அன்று மாலை தனது லாரியை பழுது பார்ப்பதற்காக ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை அடுத்த வி.சி.மோட்டூர் பகுதியில் உள்ள பழுது பார்க்கும் கடைக்கு வந்துள்ளார்.

லாரியை எடுத்துவந்தவர் பழுது பார்க்கும் கடைக்கு பக்கத்தில் உள்ள 35 வயதான சரவணன் என்பவருக்கு சொந்தமான கடை வாசலில் லாரியை நிறுத்தியுள்ளார். அப்போது கடையில் 40 வயதான நண்பர் குழந்தைவேலு என்பவருடன் மதுகுடித்துக்கொண்டிருந்த சரவணன் தனது கடை வாசலில் நிறுத்திய லாரியை எடுக்க கூறியுள்ளார்.

சிறிது நேரத்தில் எடுத்துவிடுவதாக நிர்மல் கூறியுள்ளார். ஆனால் மதுபோதையில் இருந்த சரவணனுக்கும் நிர்மலுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த சரவணனும் அவரது நண்பர் குழந்தைவேலுவும் கட்டையால் நிர்மலையும் அவரது லாரியையும் தாக்கியுள்ளனர்.

இதில் நிர்மலின் லாரி முன்பக்க கண்ணாடி உடைந்து சேதமடைந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த நிர்மல் ஏற்கனவே லாரில் பதுக்கிவைத்திருந்த கத்தியால் சரவணனை சரமாரியாக குத்தியுள்ளார். மேலும் அவரது நண்பர் குழந்தைவேலுவையும் விடாத நிர்மல் ஓட ஓட சாலையில் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை துரத்திச்சென்று கண்மூடித்தனமாக குத்தியுள்ளார்.

இதிலு படுகாயமடைந்த நண்பர்கள் இருவரும் துடிதுடித்து உயிரிழந்தனர். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ராணிப்பேட்டை போலீசார் தப்பியோடிய நிர்மலை பிடித்தனர். கொலை வழக்கில் கைது செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரித்துவருகின்றன்றர். மதுபோதையால் சாதாரணமான பிரச்னை வாக்குவாதமாக மாறி இரட்டை கொலையாக முடிந்த சம்பவம் ராணிப்பேட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- க.சிவா, செய்தியாளர், ராணிப்பேட்டை

First published:

Tags: Crime News, Double murder, Ranipettai