ஹோம் /நியூஸ் /ராணிப்பேட்டை /

பல வீடுகளில் கைவரிசை காட்டிய பலே திருடன் கைது... திருடிய நகைகளை உருக்கியதால் மீட்பதில் சிக்கல்

பல வீடுகளில் கைவரிசை காட்டிய பலே திருடன் கைது... திருடிய நகைகளை உருக்கியதால் மீட்பதில் சிக்கல்

கொள்ளையன் கைது

கொள்ளையன் கைது

சேட்டு கடைகளில் கொள்ளையடித்த நகைகளைஉருக்கி விற்பனை செய்து விட்டதால் அதனை மீட்க முடியாமல் போலீசால் திணறி வருகின்றனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Ranipettai (Ranipet), India

  ராணிப்பேட்டை அருகே பல வீடுகளில் கைவரிசை காட்டிய திருடனை போலீசார் கைது செய்தனர். 

  திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியை சேர்ந்த பிரபல கொள்ளையன் கேடி காடிஸ்(30), அவரது கூட்டாளிகளான திவாகர் (30), அர்ஷாத்(30), சதீஷ்(30) ஆகியோர் சேர்ந்து ராணிப்பேட்டை மாவட்டத்தின் பல பகுதிகளில் வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். அதன் மூலம் கிடைத்த பணத்தை கொண்டு காடீஷ், ரேஸ் மாடுகளை வாங்கியதாக கூறப்படுகிறது.

  இந்த நிலையில் வாலாஜாபேட்டை சுங்கச்சாவடியில் காவல் ஆய்வாளர் காண்டீபன் தலைமையிலான போலீசார் இரவுநேர இருந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்தது வாணியம்பாடி பகுதியில் சேர்ந்த காடிஷ் என்பதும் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ராணிப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது.

  இதையும் படிங்க | ராணிப்பேட்டையில் மின்கம்பம் மீது சொகுசு கார் மோதி விபத்து

  இதனைத் தொடர்ந்து காடீஷ், மற்றும் அவனது கூட்டாளிகளை வாலாஜாப்பேட்டை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொண்ட  விசாரணையில், கொள்ளையடிக்கப்பட்ட சுமார் 100 சவரன் தங்க நகைகள் சேட்டு கடைகளில் உருக்கி விற்பனை செய்து விட்டதால் அதனை மீட்க முடியாமல் போலீசால் திணறி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது 6 சவரன் தங்க நகைகள் 2  இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த வாலாஜாப்பேட்டை போலீசார் 4 பேரையும் கைது செய்து வாலாஜா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையிலடைத்தனர்.

  செய்தியாளர்: க.சிவா, ராணிப்பேட்டை.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Arrest, Crime News, Ranipettai, Theft