ஹோம் /நியூஸ் /ராணிப்பேட்டை /

தலையணை, போர்வையில் கொடூர அழுக்கு.. ரயிலை நிறுத்திய பயணிகள்..!

தலையணை, போர்வையில் கொடூர அழுக்கு.. ரயிலை நிறுத்திய பயணிகள்..!

அரக்கோணம் ரயில் நிலையத்தில் பயணிகள் வாக்குவாதம்

அரக்கோணம் ரயில் நிலையத்தில் பயணிகள் வாக்குவாதம்

குஜராத் மாநிலத்திற்கு செல்லும் ஏக்தா ரயிலில் அசுத்தமான தலையணை, போர்வை வழங்கப்பட்டதை கண்டித்து அரக்கோணத்தில் ரயிலை நிறுத்தி பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Ranipettai (Ranipet), India

  சென்னை செண்ட்ரல் ரயில்நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஏக்தா ரயிலில் ஏ1, ஏ2 மற்றும் பி1 முதல் பி4 என 6 ஏசி பெட்டிகளில் போர்வை மற்றும் தலையணை அசுத்தமாக இருந்தது. அதனால் அதை மாற்றித் தருமாறு பயணிகள் டிக்கெட் பரிசோதகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  இந்நிலையில் அரக்கோணத்தில் நிற்காத அந்த வண்டியை பயணிகள் அரக்கோணத்தில் நிறுத்தினர்.

  இதைத் தொடர்ந்து அரக்கோணம் ரயில் நிலைய மேலாளர் மற்றும் ரயில்வே இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி ஆகியோர் அங்கு சென்று பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ரயில் நிலைய அதிகாரிகள் ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் புதிய போர்வை மற்றும் தலையணை வழங்கப்படும் என்று உறுதியளித்தனர்.

  Also see... எலிக்காக வைக்கப்பட்ட மின்சாரம்.. வயலுக்குச் சென்ற சிறுவன் பரிதாப பலி.. திருச்சியில் சோகம்!

  அதன்பேரில்  அரக்கோணத்தில் நிற்காமல் செல்லும் ஏக்தா  எக்ஸ்பிரஸ் ரயில் 20 நிமிடங்கள் அரக்கோணம் ரயில் நிலையத்தில் நின்று பிறகு புறப்பட்டது. இந்த சம்பவம் அரக்கோணத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

  செய்தியாளர்: க.சிவா,ராணிப்பேட்டை 

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Arakkonam, Passengers, Train