ஹோம் /நியூஸ் /ராணிப்பேட்டை /

ஏசி வேலை செய்யாததால் ரயிலை நிறுத்திய பயணிகள்.. அரக்கோணத்தில் பரபரப்பு!

ஏசி வேலை செய்யாததால் ரயிலை நிறுத்திய பயணிகள்.. அரக்கோணத்தில் பரபரப்பு!

ரயிலை நிறுத்திய பயணிகள்

ரயிலை நிறுத்திய பயணிகள்

Arakkonam train issue | சுமார் 1 மணி நேர தாமதத்திற்கு பிறகு ரயில் புறப்பட்டது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Arakonam (Arakkonam) | Ranipettai (Ranipet) | Tamil Nadu

சென்னை - பெங்களூர் ரயிலில் ஏசி வேலை செய்யாமல் போனதால் அரக்கோணம் ரயில் நிலையத்தில், ரயிலை நிறுத்தி பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சென்னை சென்ட்ரலில் இருந்து பெங்களூருக்கு தினசரி வண்டி எண் 1 2 6 5 7 என்ற எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. வழக்கம் போல் இந்த ரயில் நேற்று சென்று கொண்டிருந்தது.

நள்ளிரவு 12 மணியளவில் இந்த ரயில் அரக்கோணம் வந்த போது, பி5 ஏசி கோச்சில் ஏசி வேலை செய்யாததாக கூறி பயணிகள் ரயிலை நிறுத்தி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அரக்கோணம் ரயில் நிலையம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. ஏசி வேலை செய்யவில்லை என்றால் வரமாட்டோம் என ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து, அரக்கோணம் ரயில் நிலையத்தில் இருந்த ஏசி மெக்கானிக் வரவழைக்கப்பட்டு, ரயிலில் ஏசி சரி செய்யப்பட்டது. தொடர்ந்து 1 மணி நேர தாமதத்திற்கு பிறகு ரயில் அங்கிருந்து புறப்பட்டது.

செய்தியாளர்: சிவா, அரக்கோணம்.

First published:

Tags: Arakkonam, Local News, Train