Home /News /ranipet /

நான் விளம்பரப் பிரியனா? - மு.க.ஸ்டாலின் ஆவேசம்

நான் விளம்பரப் பிரியனா? - மு.க.ஸ்டாலின் ஆவேசம்

MK stalin

MK stalin

MK Stalin : எனக்கு எதற்கு விளம்பரம், இனிமேலும் எனக்கு விளம்பரம் தேவையா என்று ராணிப்பேட்டையில் நடந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    ராணிப்பேட்டையில் நடந்த அரசு விழாவில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னை சிலர் விளம்பரப் பிரியன் என்று சொல்வதாகவும், அப்படி விளம்பரம் தேட வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என்றும் ஆவேசமாகக் கூறினார்.

    திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்றார். நேற்று திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் திறப்பு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, வேலூர் பஸ் நிலையம் திறப்பு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்ற முதலமைச்சர் இரவு ராணிப்பேட்டை வருகை தந்தார்.

    அங்கு பாரதிநகரில் உள்ள ஜி.கே.ரெசிடென்சியில்‌ தங்கினார். அதனைத் தொடர்ந்து, இன்று காலை ராணிப்பேட்டை பாரதி நகரில் ரூ.118.40 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைத்தார்.

    இந்நிலையில் ராணிப்பேட்டையில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளிக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். வகுப்பறையில் இருந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் கலந்துரையாடினார். அங்குள்ள அடிப்படைக் கட்டமைப்புகள் மற்றும் தேவைகள் குறித்து அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார்.

    மாணவர்களிடம் படிப்பதற்குரிய சூழ்நிலைகள், தேவைகள் குறித்து கலந்துரையாடினார். ஒவ்வொரு மாவட்டத்திற்கு செல்லும் போதும் முதல் அமைச்சர் ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொள்ளுவது வழக்கமாக இருக்கிறது. அந்த வகையில் ராணிப்பேட்டையில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளிக்கு தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டு வகுப்பறையில் இருக்கக்கூடிய ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தார்.

    இந்நிலையில், ராணிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் விழாவில் பேசிய முதமைச்சர், ‘ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்’ என்று அண்ணா கூறியதை மேற்கோள் காட்டிப் பேசினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    பெற்றோர்கள் எப்படி பிள்ளைகளின் ஒவ்வொரு கோரிக்கைகளையும் தீர்த்து வைக்கிறார்களோ, அதுபோலத்தான் ஒரு அரசும் செயல்பட வேண்டும். அப்படித்தான் திமுக அரசு செயல்பட்டு ஒவ்வொரு தனிமனிதனின் தேவைகளையும் நிறைவேற்றி வருவதாக தெரித்தார்.

    Must Read : ‘புது உலகைப் படைக்கும் பெண்கள்’... இலவசப் பேருந்து திட்டமும்… 131 கோடி பயணங்களும்… ஒரு பார்வை!

    சிலர் தன்னை விளம்பர பிரியர் என்று சொல்வதாக கூறிய முதலமைச்சர், ‘எனக்கு எதற்கு விளம்பரம், இனிமேலும் எனக்கு விளம்பரம் தேவையா?, ஏற்கெனவே கிடைத்த பெருமைகளையும், பேரையும் நான் காப்பாற்றினாலே போதும் என்று நினைப்பவன் நான்’ என்று பல்வேறு எடுத்துக்காட்டுகளுடன் கூறி, நான் விளம்பரப் பிரியன் இல்லை என்றும், அதற்கான அவசியம் இல்லை என்றும் கூறினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
    Published by:Suresh V
    First published:

    Tags: DMK, MK Stalin, Ranipettai

    அடுத்த செய்தி