பக்கத்து வீட்டு பெண் மீது மோகம் கொண்டதால், கணவன் கஞ்சா போதையின் உச்சத்தில் இருந்த போது பெண்ணின் வீட்டுக்கு நள்ளிரவில் அனுப்பி பெண்ணையும் அவரின் மகளையும் வன்புணர்வு செய்ய வைத்த மனைவியையும் அவரின் கணவரையும் கைது செய்துள்ளது காவல்துறை.
கன்னியாகுமரி மாவட்டத்தில் வசித்து வந்த பெண் பிரியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வயது(40). இவர் தனது கணவரை பிரிந்து வந்து ராணிபேட்டை மாவட்டத்தில் தன் மகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். இவரது 17 வயது மகள் அங்குள்ள அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர்களது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் பாஸ்கரன் என்கிற பகுடு பாஸ்கரன்(35). கஞ்சா வியாபாரியான இவர் மீது கொள்ளை, மிரட்டல், மற்றும் கஞ்சா விற்பனை தொடர்பாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்று திரும்பியுள்ளார்.
இதையும் படிக்க : பள்ளி வகுப்பறையில் 13வயது மாணவிக்கு பாலியல் தொல்லை - போக்சோவில் மாணவர்கள் கைது
இவருக்கு பக்கத்து வீட்டில் வசித்து வந்த பிரியாவின் மீது மோகம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதை கவனித்த பாஸ்கரனின் மனைவி துர்கா ( 28 ), பிரியாவிடம் நேரில் சென்று “ஏய் நீ அழகா இருக்கேன்னு என் கணவர் அடிக்கடி சொல்லிக்கிட்டு இருக்காரு. இதனால் எங்களுக்கு சண்டை வருகிறது. அதனால் நீ இங்கிருந்து வேறு ஊருக்கு சென்று விடு” என மிரட்டியுள்ளார். அதற்கு பிரியா, “நான் ஏன் இங்கிருந்து செல்ல வேண்டும்” என்று பதிலுக்கு கேட்டதால் பிரச்சனை எழுந்துள்ளது.
இதற்கு பின் தான் கொடூரம் அரங்கேறியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கஞ்சா போதையின் உச்சத்தில் இருந்த கணவன் பாஸ்கரனை, இரவு நேரத்தில் பிரியா வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார் அவரின் மனைவி துர்கா. பிறகு பிரியாவின் வீட்டு கதவை துர்கா தட்டியுள்ளார். கதவை தட்டியதும் பிரியா கதவைத் திறந்தபோது, கணவனை உள்ளே அனுப்பிவிட்டு வெளிப்பக்கமாக துர்கா தாழ்ப்பாள் போட்டு விட்டு சென்றுள்ளார். பிரியாவின் வீட்டிற்குள் சென்றதும் பாஸ்கரன் கஞ்சா போதையில் கத்தியை காட்டி மிரட்டி பிரியாவை வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் பிரியாவை ஓர் அறையில் தள்ளி பூட்டிவிட்டு, அவரின் 17 வயது மகளையும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்
இந்த கொடூரத்தை தனது செல்போனில் வீடியோ மற்றும் போட்டோ பதிவு செய்ததோடு, அதை வைத்துக்கொண்டு பாஸ்கரன் அடிக்கடி பிரியாவை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் பொறுமையை இழந்த பிரியா ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து போக்சோ சட்டத்தில் பாஸ்கரனையும், மாஸ்டர் பிளான் போட்டுக்கொடுத்த அவரது மனைவி துர்காவையும் கைது செய்துள்ளனர்.
செய்தியாளர் : சிவா (ராணிபேட்டை)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Local News, Pocso, Ranipettai, Rape case, Sexual abuse, Sexual harassment