திருத்தணி அருகே உள்ள ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தாலுகா கிழவணம் கிராமத்தில் வசிப்பவர் பாஸ்கர்(43), இவர் அரக்கோணத்தில் உள்ள தனியார் டயர் தொழிற்சாலையில் பணியாளராக பணியாற்றி வருகிறார். மேலும் இவர் கராத்தே மாஸ்டராகவும் உள்ளார்.
இந்நிலையில், இன்று காலை பாஸ்கரின் உறவினர் ஆஞ்சநேயர் ரெட்டி, மகன் சந்திரன் மற்றும் அவரது மனைவி ஜோதி ஆகியோர் பாஸ்கருக்கு சொந்தமான இடத்தில் உள்ள தென்னை மரத்தில் இளநீர் பறித்துள்ளனர்.
இதனை பாஸ்கர் தட்டி கேட்டு உள்ளார். இதனை அருகில் இருந்து பாஸ்கரின் மகன் ஆகாஷ் வீடியோ எடுத்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த தென்னை மரத்தில் இளநீர் பறித்துக் கொண்டிருந்த சந்திரன் இளநீர் வெட்டும் அரிவாளை எடுத்து வந்து பாஸ்கர் மகன் ஆகாஷ் கண்ணு முன்னே விவசாயி சந்திரன், பாஸ்கரை நெஞ்சு பகுதியில் ஒரே வெட்டாக வெட்டி சாய்த்தார்.
இதையும் படிங்க : TNPSC : குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது..? டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பாஸ்கர் மயங்கி விழுந்தார். மேலும், வீடியோ எடுத்த ஆகாஷை சந்திரன் வெட்டுவதற்காக துரத்தியுள்ளார். அவன் அருகில் ஓடி தப்பினான். இதற்கிடையில், படுகாயம் அடைந்த கராத்தே மாஸ்டர் பாஸ்கரை அவரது உறவினர்கள் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலமாக அழைத்து சென்றனர்.
இந்நிலையில், திருத்தணி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பாஸ்கர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட பாஸ்கரது உறவினர்கள் திருத்தணி அரசு மருத்துவமனையில் அழுத சம்பவம் காண்பவரை சோகத்தில் ஆழ்த்தியது.
இளநீர் வெட்டிய நபரை தடுத்த குற்றத்திற்காக கராத்தே மாஸ்டர் பாஸ்கர் மகன் ஆகாஷ் கண் முன்னே வெட்டிக்கொன்ற சம்பவம் அந்த பகுதியில் ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்திரனை கைது செய்து அரக்கோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
செய்தியாளர் : சிவா - ராணிப்பேட்டை
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Local News, Ranipettai