ஹோம் /நியூஸ் /ராணிப்பேட்டை /

17 ஆண்டுகளுக்கு பின் மனைவி நடத்தையில் சந்தேகம் - ஷூலேஸால் கழுத்தை இறுக்கி கொன்ற கணவன்

17 ஆண்டுகளுக்கு பின் மனைவி நடத்தையில் சந்தேகம் - ஷூலேஸால் கழுத்தை இறுக்கி கொன்ற கணவன்

மனைவியை கொலை செய்த கணவன்

மனைவியை கொலை செய்த கணவன்

Ranipettai : ராணிப்பேட்டை அருகே திருமணமாகி 17 ஆண்டுகளுக்கு பின் மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால், ஷீ லேஸால் மனைவி கழுத்தை இறுக்கி கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  ராணிப்பேட்டை மாவட்டம் நவல்பூர் தியாகி மாணிக்கம் தெருவில் வசிபவர் சுலைமான் (40). இவரது மனைவி மும்தாஜ் (35). இவர்களுக்கு திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகின்றன. இந்த தம்பதிக்கு இரண்டு ஆண் பிள்ளைகளும் உள்ளனர். சுலைமான் அதே பகுதியில் உள்ள தனியார் கேஸ் ஏஜன்சியில் வேலை செய்து வருகிறார்.

  இந்நிலையில், சுலைமானுக்கு அவரது மனைவி மும்தாஜ் நடத்தையில் சந்தேகம் இருந்து வந்ததாகவும், அதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில் சுலைமான் சந்தேகத்தின் பேரில் மனைவி மும்தாஜுடன் நேற்று தகராறில் ஈடுபட்டுள்ளார்.

  அப்போது  ஆத்திரத்தில் திடீரென, அருகே இருந்த ஷூலேஸால் மனைவி மும்தாஜ் கழுத்தை இறுக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

  மனைவி உயிரிழந்ததைக் கண்ட சுலைமான் அங்கிருந்து தப்பிக்க முயற்சித்துள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அதற்குள் தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த ராணிப்பேட்டை போலீசார் வீட்டில் இருந்த சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து  வழக்குப்பதிவு செய்த ராணிப்பேட்டை போலீசார் மனைவியை கொலை செய்த சுலைமானை கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

  Must Read : கள்ளக்குறிச்சி மாணவி மரணம்.. வாட்ஸ்ஆப் குழுவில் சட்டவிரோதமாக பதிவிட்ட இருவர் திருப்பூரில் கைது

  திருமணமாகி 17 ஆண்டுகளுக்கு பின் மனைவி நடத்தையின் மீது எழுந்த சந்தேகத்தால் கணவனே ஷூ லேசால் கழுத்தை இறுக்கி கொலை செய்த சம்பவம் ராணிப்பேட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  செய்தியாளர் - க.சிவா, ராணிப்பேட்டை.

  Published by:Suresh V
  First published:

  Tags: Crime News, Murder, Ranipettai