Home /News /ranipet /

யாரை நம்புறதுன்னு தெரியல.. ஐ மிஸ் யூ பொண்டாட்டி.. கடிதம் எழுதி வைத்து இளைஞர் தற்கொலை

யாரை நம்புறதுன்னு தெரியல.. ஐ மிஸ் யூ பொண்டாட்டி.. கடிதம் எழுதி வைத்து இளைஞர் தற்கொலை

சாதி மாற்று திருமணம் - தற்கொலை செய்துக் கொண்ட இளைஞர்

சாதி மாற்று திருமணம் - தற்கொலை செய்துக் கொண்ட இளைஞர்

Ranipettai | காதல் திருமணம் செய்த இளைஞர் மனமுடைந்த கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Ranipettai (Ranipet), India
  வாலாஜாப்பேட்டை அடுத்த தண்டுமாரியம்மன் கோவி தெருவை சேர்ந்தவர் சக்திவேல்(26). இவர் சுங்குவார்ச்சத்திரம் பகுதியில் உள்ள செல்போன் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். அப்போது அதே தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்த தேன்மொழி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. சக்திவேலின் பெற்றோர்கள் கடந்த கொரோனா காலத்தில் உயிரிழந்த நிலையில் தனது தங்கைக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். இதற்கு பின்பு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வீட்டை விட்டு வெளியே வந்த தேன்மொழியை பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளார்.

  திருமணத்திற்கு பின் வாலாஜாபேட்டை காவல் நிலையத்தில் தேன்மொழியின் பெற்றோர்களுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போது, திருமணத்திற்கு தேன்மொழியின் பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதனால் மகிழ்ச்சியடைந்த சக்திவேல் தனது மனைவியுடன் புதிய பணியில் சேர்வதற்காக பெங்களூரு நோக்கி பேருந்ததில் சென்றுள்ளார்.

  இதனை நோட்டமிட்ட தேன்மொழியின் உறவினர்கள் ஓடும் பேருந்தை திருவலம் அருகே காரில் வழிமறித்து சக்தி வேலை சரமாரியாக தாக்கி விட்டு தேன்மொழியை காரில் அழைத்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து சக்திவேல் போலீசாரிடம் புகார் அளித்தும் அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்காததால் மனம் உடைந்த சக்திவேல் உருக்கமான கடிதத்தை எழுதி விட்டு எலி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.  சக்திவேலை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்திருந்த நிலையில் தற்போது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞரின் வீட்டிலிருந்து கடிதத்தை போலீசார் கைப்பறியுள்ளதாக தெரிகிறது. அந்த கடிதத்தில், தனக்கு உதவிய நண்பர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, தனது மனைவியுடன் வாழ்ந்த 5 நாட்கள் மறக்க முடியாது எனவும், அவரது பெற்றோர்கள் இதுபோல் செய்வார்கள் என தான் எதிர்பார்க்கவில்லை. அதனால் நான் இந்த உலகை விட்டு செல்கிறேன் என உருக்கமாக எழுதி இருந்தது.

  Also see... இரவு நேரங்களில் வீடு புகுந்து திருடும் திருடன்..!

  அந்த கடிதத்தில் "i am quit  என ஆரம்பித்து என்னை மன்னித்துவிடு உன் முகத்தை பார்க்கும் அருகதை எனக்கு கிடையாது. இனிமேல் இனி ஒரு பிறவி இருந்தால் நாம் அங்கு சந்திக்கலாம் உன்னுடன் இருந்த 5 நாட்கள் என் உறவு, நண்பர்கள் அனைவரையும் தூக்கி எறிந்தேன் உன் அன்புக்கு நான் அடிமை ஆனேன். தற்கொலை என்பது கோழைத்தனம் என பலமுறை உன்னிடம் கூறியிருக்கிறேன் வேறு என்ன செய்வது தெரியாமல் உன்னை விட்டு இவ்வுலகை விட்டு என் அன்னையிடம் செல்கிறேன். யாரை நம்புவது என்று தெரியவில்லை. முடிந்தால் நான் சென்ற பிறகு என்னை மறக்காமல் இரு என் ஆசை பொண்டாட்டி.நாம் மூன்று வருடம் காதலில் இருந்தோம். ஆனால் இந்த 5 நாட்களில் நம் திருமண வாழ்க்கை சீக்கிரம் முடிவடையும் என கனவில் கூட நினைக்கவில்லை” என்று எழுதியுள்ளார்.

  Also see... பார் உரிமையாளர் மீது கொலைவெறி தாக்குதல்!

  மேலும், “ போலீஸ் பஸ் ஏற்றிவிட்ட பிறகு எல்லாம் முடிந்து விட்டது. இனி நமக்கு எந்த தொந்தரவும் இல்லை இனி நம்மை யாராலும் பிரிக்க முடியாது என பேசிக்கொண்டு சென்ற போது உன் வீட்டு விசுவாசிகள் இப்படி செய்வார்கள் என நான் ஒருபோதும் கனவில் கூட நினைக்கவில்லை. நானும்  வாலாஜா போலீஸ் ஸ்டேஷன், திருவலம் போலீஸ் ஸ்டேஷன், ராணிப்பேட்டை எஸ்பி ஆபிஸ் வேலூர் டிஐஜி ஆபீஸ் சென்று புகார் கொடுத்தும் உன்னை மீட்டு விடலாம் என எண்ணி ஏமாந்து போய் விட்டேன்.

  கையில் கிடைத்த பொருளை தொலைத்த பாவி ஆனேன். நான் நீ ஆசைப்பட்டபடி உன் புகைப்படம் என் வீட்டில் மாட்டி விட்டேன். அதுபோல் நீ ஆசைப்பட்டது போல் உன் கணவனாய் உயிர் நீக்கம் செய்கிறேன்  என் ஆசை பொண்டாட்டி” என இக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  செய்தியாளர்: க.சிவா, ராணிப்பேட்டை
  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Commit suicide, Love marriage, Ranipettai

  அடுத்த செய்தி