ஹோம் /நியூஸ் /ராணிப்பேட்டை /

மெட்டல் டிடெக்டர் மூலம் பூமிக்கடியில் உள்ள ஐம்பொன் சிலைகளை திருடிய கும்பல் - பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் போலீசிடம் சிக்கியது

மெட்டல் டிடெக்டர் மூலம் பூமிக்கடியில் உள்ள ஐம்பொன் சிலைகளை திருடிய கும்பல் - பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் போலீசிடம் சிக்கியது

பறிமுதல் செய்யப்பட்ட ஐம்பொன் சிலைகள்

பறிமுதல் செய்யப்பட்ட ஐம்பொன் சிலைகள்

Ranipet Statue Theft | சில நாட்களுக்கு பின் இந்த சிலைகளை பங்கு பிரிப்பதற்காக மீண்டும் இந்த கும்பல் பாலாஜியின் வீட்டிற்கு வந்துள்ளது. அப்போது பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Ranipettai (Ranipet), India

  ஆற்காடு அருகே மெட்டல் டிடெக்டர் உதவியோடு பூமிக்கு அடியில் உள்ள ஐம்பொன் சிலைகளை கண்டுபிடித்து அதனை லாவகமாக திருடி எடுத்து வந்த மர்ம  கும்பல் அதனை வீட்டில் வைத்து பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட சண்டையால் ஆற்காடு போலீசாரிடம் வசமாக சிக்கிய ருசீகர சம்பவம் அரங்கேறியுள்ளது.

  ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த சத்யா நகர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் தக்காளி பாலாஜி(39). இவரது வீட்டில் அலறல் சத்தம் கேட்பதாக பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் ஆற்காடு நகர போலீசார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

  அப்போது ஆற்காடு பகுதியை சேர்ந்த தக்காளி பாலாஜி மற்றும் முரளி, காட்பாடி பகுதியை சேர்ந்த தினேஷ் மற்றும் அரக்கோணம் பகுதியை சேர்ந்த பெருமாள் ஆகியோர் கூட்டாக இணைந்து, விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கோட்டையிலிருந்து பூமிக்கு அடியில் இருந்த ஐம்பொன் சிலைகளை திருடி வந்து வீட்டில் வைத்திருப்பது தெரியவந்தது.

  இதையும் படிங்க : ரயில்வே அதிகாரியின் மனைவிக்கு ரயில் நிலையத்திலேயே நடந்த பிரசவம்..!

  மேலும், மெட்டல் டிடெக்டர் உதவியோடு பூமிக்கு அடியில் இருக்கும் சிலைகளை இந்த கும்பல் கண்டுபிடித்துள்ளது. இதற்காக பல நாட்கள் நோட்டமிட்டு பின்னர் லாவகமாக, பூமிக்கு அடியிலிருந்த 3/4(முக்கால் அடி) முருகர் சிலை ஒன்றும், 1/4 அடி மாரியம்மன் சிலை மூன்றும், இரு வெள்ளி பிள்ளையார் சிலைகளையும்  திருடி வந்துள்ளனர்.

  இதனைத்தொடர்ந்து ஆற்காடு சத்யா நகர் பகுதியில் உள்ள பாலாஜிக்கு சொந்தமான வீட்டில் அனைத்து சிலைகளையும் மறைத்து வைத்துள்ளனர். சில நாட்களுக்கு பின் இந்த சிலைகளை பங்கு பிரிப்பதற்காக மீண்டும் இந்த கும்பல் பாலாஜியின் வீட்டிற்கு வந்துள்ளது. அப்போது பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது.

  இதையும் படிங்க : தமிழகத்தில் முதல்முறையாக நகர, மாநகரசபை கூட்டம்! - முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று குறை கேட்கிறார்?

  இதனால் ஏற்பட்ட அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் ஆற்காடு நகர போலீசாருக்கு தகவல் கொடுக்கவே, காவல் ஆய்வாளர் விநாயகமூர்த்தி தலைமையிலான போலீசார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்ட போது இந்த சம்பவம் வெளிவந்துள்ளது.

  இதனைத்தொடர்ந்து இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்த ஆற்காடு நகர போலீசார், இதே கும்பல் மற்ற பகுதிகளில் கொள்ளையில் ஈடுபட்டுள்ளதா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆற்காட்டில் பல கோடி மதிப்பிலான  ஐம்பொன் சிலைகள் பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  செய்தியாளர் : சிவா - ராணிப்பேட்டை

  Published by:Karthi K
  First published:

  Tags: Crime News, Ranipettai