ஹோம் /நியூஸ் /ராணிப்பேட்டை /

கனமழை காரணமாக ராணிப்பேட்டையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

கனமழை காரணமாக ராணிப்பேட்டையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

பள்ளி

பள்ளி

Ranipettai school leave | தொடர் மழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் இன்று விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ranipettai (Ranipet), India

ராணிப்பேட்டையில் மழை காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பு கருதி இன்று விடுமுறை அளிக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. வட கடலோர தமிழகம் மட்டுமல்லாமல் உள்மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது.

மழை காரணமாக இன்று 12.12.2022 காஞ்சிபுரம் தாலுக்கா உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார்கள்.

அதே போல திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக திருவள்ளூர் ஊத்துக்கோட்டை வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பை ஆட்சியர் ஆல் பி ஜான் வர்கீஸ் வெளியிட்டுள்ளார். விழுப்புரத்திலும் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Also see... மீண்டும் ஒரு புயல்? புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு! புது அலெர்ட்!

இதே போல ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டம் மற்றும் அரக்கோணம் வட்டங்களில் இன்று விடியகாலை முதல் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. அதனால் அரக்கோணம் மற்றும் நெமிலி வட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து  ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

First published:

Tags: College, Heavy Rainfall, Ranipettai, School, School Leave