Home /News /ranipet /

நண்பருடன் செல்போன் பேச்சு.. கண்டித்தும் கேட்காத காதல் மனைவியை கொன்ற கணவன் - ராணிப்பேட்டையில் பயங்கரம்

நண்பருடன் செல்போன் பேச்சு.. கண்டித்தும் கேட்காத காதல் மனைவியை கொன்ற கணவன் - ராணிப்பேட்டையில் பயங்கரம்

ராமு வயது அவரது மனைவி சரிதா..

ராமு வயது அவரது மனைவி சரிதா..

Ranipet | சந்தேகத்தால் தனது மனைவியை கொன்று விட்டு ஒன்றும் தெரியாதது போல் போலீசில் மனைவியை காணவில்லை என்று புகார் அளித்து நாடகமாடிய கணவன் கைது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Ranipettai (Ranipet), India
    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த ரத்தனகிரி பூட்டுதாக்கு கிராமத்தில் செல்போனில் நண்பருடன் பேசி வந்ததால் சந்தேகமடைந்த கணவன், தனது மனைவியை  கொன்று  கிணற்றில் வீசிய சம்பவம்   அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    ராணிப்பேட்டை மாவட்டம் பூட்டுத்தாக்கு பெரிய தெருவை சேர்ந்தவர் ராமு (வயது 40). இவரது மனைவி சரிதா (வயது27). இருவரும் காதலித்து திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகின்றன. சில ஆண்டுகளுக்கு முன் ஆண் குழந்தை பிறந்து இறந்துவிட்டதாக தெரிகிறது. இந்நிலையில் கணவன், மனைவி இருவரும் பெருமுகையில்  உள்ள தனியார் லெதர் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகின்றனர்.
    கடந்த மாதம் 25ம் தேதி சரிதா வீட்டிலிருந்து திடீரென காணாமல் போனதாக ரத்தனகிரி காவல் நிலையத்தில் அவரின் கணவர் ராமு புகார் கொடுத்துள்ளார்.

    அதன் பேரில் ரத்தினகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.இந்நிலையில் ராமு குடியிருக்கும்  வீட்டில் உள்ள குடிநீர் கிணற்றிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ரத்தினகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து பார்த்ததில் கிணற்றில் அழுகிய நிலையில் பெண் சடலம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆற்காடு தீயணைப்பு துறையினர் அங்கு வந்து கிணற்றில் கிடந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    Read More : ஆண்களிடம் அதிகம் பேசியதால் 11 வயது மகளை கால்வாயில் தள்ளிய பெற்றோர் கைது


    அந்த நேரத்தில் ராமு வீட்டில் இல்லாததால் அவரது செல்போன் மூலம் தொடர்பு கொண்ட போலீசார் தொடர்ந்து அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் ராமு, பூட்டுதாக்கு கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் சரணடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவரை போலீசாரிடம் ஒப்படைத்த பின்பு, DSP பிரபு தலைமையிலான போலீசார் மேற்கொண்ட விசாரணையில், சரிதா உடன் திருமணம் ஆகி 15 ஆண்டுகள் ஆனதாகவும் தங்களுக்கு குழந்தை இல்லாததால் இருவரும் மன உளைச்சல் இருந்து வந்ததாக தெரிவித்தார். சமீப காலமாக தனது மனைவி சரிதா தொழிற்சாலையில் வேலை செய்யும் நண்பரோடு செல்போனில் அதிக நேரம் பேசி வந்ததாகவும், பலமுறை கண்டித்தும் அதனை கைவிடாமல் தொடர்ந்து வந்ததாக கூறியுள்ளார்.

    மனைவியின் மீது தொடர்ந்து சந்தேகம் அதிகரித்து வரவே, கடந்த 24ம் தேதி தூங்கிக் கொண்டிருந்தபோது தான் காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவி சரிதாவை தலையணை வைத்து அழுத்திக் கொன்றுள்ளார். மேலும், சரிதாவின் உடலை போர்வையில் சுற்றி தனது வீட்டிற்கு பின்னால் உள்ள கிணற்றில் போட்டுள்ளார். சந்தேகத்தால் தனது மனைவியை கொன்று விட்டு ஒன்றும் தெரியாதது போல் போலீசில் மனைவியை காணவில்லை என்று புகார் அளித்து நாடகமாடிய கணவன் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது மேலும் கைது செய்யப்பட்ட ராமுவை ஆற்காடு நீதிமன்றத்தில் நீதிபதி முன் ஆஜர்படித்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    செய்தியாளர்: க.சிவா (ராணிப்பேட்டை)
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: Crime News, Murder, Ranipettai

    அடுத்த செய்தி