அரக்கோணம் அருகே கீழ்வீதி கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோயிலில் திருவிழாவையொட்டி நேற்று மாலை மயிலேறும் நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தர்கள் கிரேனில் தொங்கியபடி கிராமத்தை சுற்றி வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து இரவு 8 மணியளவில் பக்தர்கள் கிரேனில் தொங்கியபடி அம்மனுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது கிரேன் திடீரென உடைந்து விழுந்தது. இதில், பறவைக்காவடியில் தொங்கியபடி ஊர்வலமாக வந்த பிளஸ்-2 மாணவர் ஜோதிபாபு கீழே விழுந்து உயிரிழந்தார். மேலும், வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கீழ்வீதியை சேர்ந்த கூலி தொழிலாளி முத்து, ஐஸ் விற்பனை செய்து கொண்டிருந்த பூபாலன் ஆகியோரும் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் ஒரு பெண் குழந்தை உட்பட 9 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அதில், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெரப்பேரி காலனியை சேர்ந்த சின்னசாமி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். சம்பவ இடத்தில் ஆய்வு செய்த வேலூர் சரக டி.ஐ.ஜி முத்துசாமி, சாலையில் பள்ளம் இருந்ததன் காரணமாகவே விபத்து நடந்துள்ளதாக தெரிவித்தார்.
வருங்காலங்களில் இதுபோன்ற விபத்து நடக்காமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு உறுதியளித்துள்ளார்.இந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்குவது குறித்து முதலமைச்சர் முடிவு எடுப்பார் என்றும் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.