முகப்பு /செய்தி /ராணிப்பேட்டை / வெடித்து சிதறிய நாட்டு வெடிகுண்டு.. உடல் சிதறி உயிரிழந்த நரிக்குறவர்.. ஆற்காடு அருகே பரபரப்பு..

வெடித்து சிதறிய நாட்டு வெடிகுண்டு.. உடல் சிதறி உயிரிழந்த நரிக்குறவர்.. ஆற்காடு அருகே பரபரப்பு..

உயிரிழந்த முருகன், படுகாயமடைந்த பகவதி

உயிரிழந்த முருகன், படுகாயமடைந்த பகவதி

Ranipet Bomb Blast : ராணிப்பேட்டை ஆற்காடு அருகே வனவிலங்குகளை வேட்டையாட நாட்டுவெடிகுண்டு தயாரித்தபோது வெடித்து சிதறியதில் ஒருவர்  உயிரிழந்தார்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Ranipettai (Ranipet), India

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த கிளைவ் பஜார் அருகே நரிக்குறவர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு வசிக்கும் முருகன்(42) என்பவர் வீட்டில் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக நாட்டு வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக திடீரென வெடிமருந்து பொருட்கள் வெடித்து சிதறின. வெடிசத்தம் கேட்டு பொதுமக்கள் கொடுத்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உள்ளே சென்றபோது சம்பவ இடத்திலேயே முருகன் உடல் சிதறி உயிரிழந்தது தெரியவந்தது.

மேலும், பலத்த காயமடைந்த மகன் பகவதியை(22) மீட்டு வேலூரில் அரசு  மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உயிரிழந்த  முருகனின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த ராணிப்பேட்டை மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பிரபு மற்றும் மாவட்ட தீயணைப்பு அலுவலர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் இந்த சம்பவம் குறித்து ஆற்காடு நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குடியிருப்புகள் மத்தியில்  மருந்துகளை வைத்து  நாட்டு வெடிகுண்டு தயாரித்தபோது நரிகுறவர் வெடித்துச் சிதறி பலியானதுஅப்பகுதி மக்களிடையே அச்சத்தையும், பரபரப்பையும்  ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் : சிவா - ராணிப்பேட்டை

First published:

Tags: Crime News, Local News, Ranipettai