முகப்பு /செய்தி /ராணிப்பேட்டை / அந்தரத்தில் பறந்து கிணற்றில் விழுந்த கார்... ராணிப்பேட்டையில் சினிமா பாணியில் விபத்து..!

அந்தரத்தில் பறந்து கிணற்றில் விழுந்த கார்... ராணிப்பேட்டையில் சினிமா பாணியில் விபத்து..!

கிணற்றில் விழுந்த கார்

கிணற்றில் விழுந்த கார்

Ranipet News : தறிகெட்டு ஓடிய கார் அந்தரத்தில் பறந்து சென்று விவசாய கிணற்றில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Ranipettai (Ranipet), India

ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் நரசிம்மலு (35), நிக்கல்ரெட்டி (23), டாக்காநிக்கல் ரெட்டி (25). இவர்கள் பாண்டிச்சேரியில் நடைபெற்ற உறவினர் நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு பாண்டிச்சேரியிலிருந்து இன்று தங்களது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். அப்போது மூவரும் மதுபோதையில் இருந்ததால் கார் அதிவேகத்தில் வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கார் புதுப்பாடி அருகே வந்தபோது, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் அந்தரத்தில் பறந்து சென்று சாலையோரத்தில் இருந்த விவசாய கிணற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இதனைக் கண்ட அருகில் இருந்த இளைஞர்கள் உடனடியாக கிணற்றில் குதித்து காரிலிருந்த 3 பேரை காப்பாற்றியதோடு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க : சூறாவளிக்காற்று.. இடி மின்னலுடன் மழை.. புது அலெர்ட் கொடுத்த வானிலை மையம்!

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆற்காடு தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி கிரேன் உதவியோடு கிணற்றுக்குள் விழுந்த காரை மீட்டனர்.

மேலும் இந்த விபத்து குறித்து ஆற்காடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சினிமா பாணியில் நடந்த இந்த கார் விபத்து சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

செய்தியாளர் : சிவா - ராணிப்பேட்டை

First published:

Tags: Crime News, Local News, Ranipettai