Home /News /ranipet /

கொதிக்கும் வெந்நீரை கணவன் ஆணுறுப்பு மீது ஊற்றிய மனைவி.. வேறு பெண்ணுடன் தொடர்பால் ஆத்திரம்... ராணிப்பேட்டையில் பயங்கரம்

கொதிக்கும் வெந்நீரை கணவன் ஆணுறுப்பு மீது ஊற்றிய மனைவி.. வேறு பெண்ணுடன் தொடர்பால் ஆத்திரம்... ராணிப்பேட்டையில் பயங்கரம்

கொதிக்கும் வெந்நீரை கணவன் ஆணுறுப்பு மீது ஊற்றிய மனைவி

கொதிக்கும் வெந்நீரை கணவன் ஆணுறுப்பு மீது ஊற்றிய மனைவி

வேலை பார்க்கும் இடத்தில் வேறொரு பெண்ணுடன் நெருக்கம் இருப்பதாக சந்தேகமடைந்த பிரியாவிற்கும் அவரது கணவருக்குமிடையே கடந்த ஒரு மாதமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே கணவனின் நடத்தையில் சந்தேகம் அடைந்த மனைவி, கோபத்தில் வெந்நீரை கொதிக்க வைத்து கணவரின்  ஆணுறுப்பு மீது ஊற்றிய கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

    காவேரிப்பாக்கம் அடுத்த புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜ்(32). இவருக்கு திருமணம் ஆகி 7 ஆண்டுகள் ஆன நிலையில், பிரியா என்ற மனைவியும், இரு மகள்களும் உள்ளனர். தங்கராஜ் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் துப்புரவு மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கணவனின் நடத்தையில் பிரியாவிற்கு சந்தேகம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    வேலை பார்க்கும் இடத்தில் வேறொரு பெண்ணுடன் நெருக்கம் இருப்பதாக சந்தேகமடைந்த பிரியாவிற்கும் அவரது கணவருக்குமிடையே கடந்த ஒரு மாதமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. தன்னுடைய கணவர் வேறொரு பெண்ணுடன் அடிக்கடி வீடியோ காலில் பெசி வருவதை அவர் பார்த்துள்ளார். இந்த நிலையில் கணவனை பழிவாங்க நினைத்த மனைவி பிரியா, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது வெந்நீரை கொதிக்க வைத்து அதனை கணவரின் ஆணுறுப்பின் மீது ஊற்றியுள்ளார். அப்போது அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தங்கராஜை மீட்டு சிகிச்சைக்காக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    Also Read : பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை.. வாலிபர் கொலையில் திடுக்கிடும் தகவல்

    அங்கு முதலுதவி செய்த மருத்துவர்கள், 40% த்துக்கும் அதிகமான தீக்காயம் ஏற்பட்டதால் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து காவேரிப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவனின் நடத்தையில் சந்தேகம் அடைந்த மனைவி பழி வாங்குவதற்காக கொதிக்கும் வெந்நீரை ஆணுறுப்பின் மீது ஊற்றிய கொடூர சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Published by:Raj Kumar
    First published:

    Tags: Crime News, Wife Attacks Husband

    அடுத்த செய்தி