முகப்பு /செய்தி /ராணிப்பேட்டை / ராணிப்பேட்டை : சொத்து தகராறில் அண்ணன் வீட்டை இடித்து தள்ளிய தம்பிகள்..

ராணிப்பேட்டை : சொத்து தகராறில் அண்ணன் வீட்டை இடித்து தள்ளிய தம்பிகள்..

வீட்டை இடித்து தள்ளும் குடும்பத்தினர்

வீட்டை இடித்து தள்ளும் குடும்பத்தினர்

Ranipet News : ராணிப்பேட்டையில் அண்ணனின் வீட்டை பங்காளிகள் குடும்பத்தோடு சேர்ந்து ஒன்று கூடி வீட்டின் சுற்றுசுவர் மற்றும் சிமெண்ட் சீட்டுகளை உடைத்ததால் பரபரப்பு.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Ranipettai (Ranipet), India

சொத்து தகராறில் அண்ணன் வீட்டை தம்பிகள் இடித்து தள்ளிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த வாங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது தாத்தாவிற்கு சொந்தமான 13 சென்ட் இடத்தில் புதிதாக வீடு கட்டியிருந்தார். இதற்கிடையில்,  அந்த இடத்தின் அ-பதிவேட்டில் (A-Register) பங்காளிகளின் தந்தை பெயரும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த தகவல் அறிந்த ராஜ்குமாரின் தம்பிகள் அந்த இடத்தில் தங்களுக்கு பங்கு உள்ளதாக கூறி அண்ணன் கட்டிய வீட்டை பங்காளிகளான தம்பிகள் தங்களது குடும்பத்தினரோடு சேர்ந்து கடப்பாரையால் சுற்றுசுவர், சிமெண்ட் ஷீட்டுக்களை உடைத்து தள்ளினர். இதனை பார்த்து ராஜ்குமார் அதிர்ச்சியடைந்தார்.

மேலும், தனது வீட்டினை உடைக்கும் காட்சிகளை ராஜ்குமார் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்தார். இதையடுத்து, அந்த வீடியோ ஆதாரத்துடன் வாலாஜாபேட்டை போலீசாரிடம் இதுகுறித்து புகார் அளித்தார். அதன்படி இதில் சம்பந்தப்பட்ட 8 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சொத்து தகராறில் அண்ணனின் வீட்டை தம்பிகளே குடும்பத்தோடு சென்று அடித்து உடைத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் : சிவா - ராணிப்பேட்டை

First published:

Tags: Local News, Ranipettai, Tamil News