ஹோம் /நியூஸ் /ராணிப்பேட்டை /

அரக்கோணம் ரயில் நிலையத்தில் ரூ.47 லட்சம் பறிமுதல்: ஹவாலா பணமா என போலீசார் விசாரணை?

அரக்கோணம் ரயில் நிலையத்தில் ரூ.47 லட்சம் பறிமுதல்: ஹவாலா பணமா என போலீசார் விசாரணை?

அரக்கோணம் ரயில் நிலையம்

அரக்கோணம் ரயில் நிலையம்

Arakonam Railway Station | ரயிலில் இருந்து வந்த நபரிடம் இருந்து கணக்கில் வராத பணத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Arakonam (Arakkonam), India

அரக்கோணம் ரயில் நிலையத்தில் ரயிலில் இறங்கிய நபரிடம் இருந்து ரூ.47 லட்சத்து 26 ஆயிரம் பறிமுதல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையத்தில் 1வது நடைமேடையில் சென்னையில் இருந்து மும்பை செல்லும் சத்திரபதி சிவாஜி எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது .அந்த ரயிலில் இருந்து இறங்கிய நபர் ஒருவரின் கையில் பையுடன் சென்றார். அவரை பின்தொடர்ந்து வருமானவரித்துறை அதிகாரிகள் அந்தப் பையை திறந்து காட்டுமாறு தெரிவித்தனர். அதற்கு அந்த நபர் நீங்கள் சீருடையில் இல்லை நீங்கள் யார் என்று எனக்கு தெரியாது என சமாளிக்க முற்பட்டார்.

இதனையடுத்து வருமானவரித்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நபரை அரக்கோணம் ரயில்வே போலீசிடம் அழைத்து வந்து பையைத் திறந்து சோதனை நடத்தியதில் ரூ. 47 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் கணக்கில் வராத பணம் இருந்தது தெரிய வந்தது.

அந்த பணத்தை எண்ணும் பணி நடந்து கொண்டிருக்கிறது. விசாரணையில் ஜீலா வயது 40 என்பது தெரிந்தது அவர் யார் எந்த ஊர் என்பது குறித்து போலீஸ் விசாரித்து வருகின்றனர் .இந்த பணம் ஹவாலா பணமா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

First published:

Tags: Ranipettai