முகப்பு /செய்தி /ராணிப்பேட்டை / தண்ணீர் பிடிப்பதில் தகராறு.. பக்கத்து வீட்டுக்காரரை கத்தியால் வெட்டிய நிலஅளவையர்.. அரக்கோணத்தில் அதிர்ச்சி சம்பவம்

தண்ணீர் பிடிப்பதில் தகராறு.. பக்கத்து வீட்டுக்காரரை கத்தியால் வெட்டிய நிலஅளவையர்.. அரக்கோணத்தில் அதிர்ச்சி சம்பவம்

நில அளவையர் கத்தியால் வெட்டிய சம்பவம்

நில அளவையர் கத்தியால் வெட்டிய சம்பவம்

Arakonam Murder Attempt | இரு குடும்பத்தினரும் கட்டை, கத்தி மற்றும் கைகளால் தாக்கி கொண்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Arakonam (Arakkonam), India

அரக்கோணத்தில் தண்ணீர் பிடிக்கும் தகராறில் பக்கத்து வீட்டுக்காரரை நில அளவையர் கத்தியால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த மேல்பாக்கம் ஈஸ்வரன் கோயில் தெருவை சேர்ந்தவர் அருள்(45) இவர் நெமிலி நில அளவையாராக பணியாற்றி வருகிறார். இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் கருணாகரன் (55) இவர்களது குடும்பத்துக்கு இடையே கழிவுநீர் கால்வாய், வீட்டுக்கு வெளியில் வெந்நீர் காய வைப்பது தொடர்பாக முன்விரோத தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மீண்டும் தண்ணீர் பிடிப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்ட நிலையில் அரக்கோணம் டவுன் போலீசில் புகார் தரப்பட்டது. இந்த புகார் மனுவை வாபஸ் பெறுமாறு நில அளவையர் அருள் கருணாகரனை  மிரட்டி உள்ளார். ஆனால் பக்கத்து வீட்டை சேர்ந்த கருணாகரன் புகார் மனுவை வாபஸ் பெற மாட்டேன் என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மீண்டும் அவர்களுக்கிடையே நேற்று  தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரத்தில் நில அளவையர் அருள், பக்கத்து வீட்டைச் சேர்ந்த கருணாகரனை கத்தியால் வெட்டினார். மேலும் கருணாகனின் மனைவி துளசியம்மாளையும்  தாக்கியுள்ளார்.இதுதொடர்பாக இரு குடும்பத்தினரும் கட்டை, கத்தி மற்றும் கைகளால் தாக்கி கொண்டனர். இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்து கருணாகரன் (55),  அவரது மனைவி துளசியம்மாள்( 48) ஆகியோர்  அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மேலும் நிலஅளவையர் அருள் மற்றும் அவரது மனைவி ஓவியா உள்ளிட்ட இருவரும் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.  நில அளவையர் அருள் மீது ஏற்கனவே அரக்கோணம் டவுன்  காவல்துறையில் பக்கத்து வீட்டாரிடம் சண்டை போட்டது தொடர்பாக  வழக்கு பதிவு உள்ள நிலையில்  அருள் பக்கத்து வீட்டுக்காரரை கத்தியால் வெட்டிய சம்பவம் அரக்கோணத்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.

செய்தியாளர்: சிவா கருணகாரன்

First published:

Tags: Crime News, Local News, Ranipettai