ஹோம் /நியூஸ் /ராணிப்பேட்டை /

அரக்கோணத்தில் மத்திய தொழிற் பாதுகாப்புப் படையினர் பயிற்சி நிறைவு விழா

அரக்கோணத்தில் மத்திய தொழிற் பாதுகாப்புப் படையினர் பயிற்சி நிறைவு விழா

 சி. ஐ .எஸ். எப் வளாகத்தில் நடந்த பயிற்சி நிறைவு விழா

சி. ஐ .எஸ். எப் வளாகத்தில் நடந்த பயிற்சி நிறைவு விழா

Arakonam CISF Training | வீராங்கனைகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவு பெற்றது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ranipettai (Ranipet), India

அரக்கோணத்தில் 618 சி.ஐ.எஸ்.எப் உதவி சப் இன்ஸ்பெக்டர்கள்,  கான்ஸ்டபிள்களுக் கான பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை மையம் (சி. ஐ .எஸ். எப் ) இயங்கி வருகிறது.  இங்கு உதவி சப் இன்ஸ்பெக்டர்கள் 290 ( 17 பெண்கள்)  பேர் மற்றும் கான்ஸ்டபிள்கள் 328 ( 32 பெண்கள்) பேருக்கான  பயிற்சி நிறைவு விழா சி. ஐ .எஸ். எப் வளாகத்தில் நடந்தது.

சி .ஐ. எஸ். எப் .பள்ளி முதல்வரும் , டிஐஜியுமான சாந்தி ஜி. ஜெயதேவ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பயிற்சியின்போது சிறந்து விளங்கியவர்களுக்கு சுழற்கோப்பை மற்றும் சான்றிதழ்களை டிஐஜி வழங்கி பாராட்டினார்.

அதைத்தொடர்ந்து பேசிய சாந்தி ஜி, எந்த சூழ்நிலையிலும்  வீரர்கள் திறம்பட செயல்பட வேண்டும் என்றும் மேலும் இந்த பணியில் சேர்வதற்கு ஆர்வம் காட்டிய பெண்கள், அவர்களது பெற்றோர்களுக்கு நன்றியும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் என பேசினார். அதைத் தொடர்ந்து வீரர் , வீராங்கனைகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது

செய்தியாளர்: க .சிவா

First published:

Tags: Local News, Ranipettai