ஹோம் /நியூஸ் /ராணிப்பேட்டை /

ராணிப்பேட்டையில் மின்கம்பம் மீது சொகுசு கார் மோதி விபத்து

ராணிப்பேட்டையில் மின்கம்பம் மீது சொகுசு கார் மோதி விபத்து

விபத்துக்குள்ளான சொகுசு கார்

விபத்துக்குள்ளான சொகுசு கார்

Accident | சென்னையிலிருந்து சித்தூர் செல்லும் நெடுஞ்சாலையில் சொகுசு கார் ஆந்திர மாநிலம் சித்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. சரியாக நவல்பூர் அருகே வந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Ranipettai (Ranipet), India

  ராணிப்பேட்டை மாவட்டம் நவல்பூர் அருகே உயர் மின்னழுத்த கம்பிகள் செல்லும் மின்கம்பத்தின் மீது கட்டுப்பாட்டை இழந்த சொகுசு கார் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.

  சென்னையிலிருந்து சித்தூர் செல்லும் நெடுஞ்சாலையில் சொகுசு கார் ஆந்திர மாநிலம் சித்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. ராணிப்பேட்டை மாவட்டம்,  நவல்பூர் அருகே வந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், உயர்மின்னழுத்த கம்பிகள் செல்லும் மின்கம்பத்தின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் காரின் மீது மின்கம்பம் சாய்ந்ததோடு மின்கம்பிகளும் அறுந்து விழுந்தன.

  Read more: பள்ளி மாணவர்களை குறிவைத்து போதை மாத்திரை விற்பனை... 3 பேர் கைது

  உடனடியாக காரில் இருந்தவர்களை மின்வாரிய ஊழியர்கள் உதவியோடு பொதுமக்கள் பத்திரமாக மீட்டனர். லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரையும் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் உதவியோடு வாலாஜாப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த ராணிப்பேட்டை போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  செய்தியாளர்: க.சிவா

  Published by:Srilekha A
  First published:

  Tags: Accident, Ranipettai