Home /News /ranipet /

நைஜீரியா காதலிக்கு தாலிகட்டிய தமிழக இளைஞர்.. தமிழ்நாட்டின் மருமகளானார் நைஜீரிய பெண்!

நைஜீரியா காதலிக்கு தாலிகட்டிய தமிழக இளைஞர்.. தமிழ்நாட்டின் மருமகளானார் நைஜீரிய பெண்!

தமிழ் முறைப்படி நைஜீரிய காதலிக்கு தாலி கட்டி மணமாலை சூடிய தமிழர். ஒன்று கூடி நைஜீரிய மருமகளை வரவேற்ற உற்றார், உறவினர்கள்.

தமிழ் முறைப்படி நைஜீரிய காதலிக்கு தாலி கட்டி மணமாலை சூடிய தமிழர். ஒன்று கூடி நைஜீரிய மருமகளை வரவேற்ற உற்றார், உறவினர்கள்.

தமிழ் முறைப்படி நைஜீரிய காதலிக்கு தாலி கட்டி மணமாலை சூடிய தமிழர். ஒன்று கூடி நைஜீரிய மருமகளை வரவேற்ற உற்றார், உறவினர்கள்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu | Ranipettai (Ranipet)
4 ஆண்டுகளாக காதலித்து வந்த நைஜீரிய பெண்ணை ‘இந்து’ முறைப்படி தாலி கட்டி மணமாலை சூடியிருக்கிறார் வாலாஜாபேட்டையைச் சேர்ந்த தமிழக இளைஞர். 

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை பள்ளி வெங்கடாஜலபதி தெருவைச் சேர்ந்த தம்பதியர் சுப்பிரமணி - லட்சுமி. இவர்களின் மகன் திருமால்பிரசாத். 28 வயதாகும் இந்த இளைஞர் ஜெர்மனி நாட்டில் வேலை செய்து வருகிறார். 5 ஆண்டுகளுக்கு முன்பு அவர் ஐதராபாத்தில் உள்ள எம்.என்.சி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்தபோது, நைஜீரிய நாட்டுக்கு பணி நிமித்தமாக அடிக்கடி சென்று வந்தார். அப்போது, அந்த நாட்டிலுள்ள லாகோஸ் நகரைச் சேர்ந்த 25 வயதாகும் பட்ரிசியா இஃயின் எஜே என்ற இளம் பெண் மீது காதல் வசப்பட்டார்.

பட்ரிசியாவின் தோற்றமும் அழகும் நொடி நொடிக்கு மூச்சுக்காற்றாய் இதயத்தை உரசியதால், திருமால்பிரசாத் ஒருநாள் அவரிடம் சென்று மனம் திறந்து தன் காதலை வெளிப்படுத்தியிருக்கிறார். பட்ரிசியாவுக்கும் திருமால்பிரசாத்தைப் பிடித்து போனது. இருவரும் ஒருவரையொருவர் புரிந்து கொள்ளும் அளவுக்கு காதலித்து வந்தனர். இந்த நிலையில், ஜெர்மனி நாட்டில் பணிபுரிவதற்காக திருமால்பிரசாத் சென்றுவிட்டார். ஆனாலும், அவர்களுக்கு இடையேயான காதலும், அன்பும் கொஞ்சம்கூட குறையவில்லை. திருமணம் செய்து கொண்டு இணைந்து வாழ முடிவெடுத்த இருவரும், அது குறித்து தங்களது பெற்றோர்களிடம் கூறி புரிய வைத்தனர்.



பெற்றோர்களும் சம்மதம் தெரிவிக்கவே, ‘இந்து’ முறைப்படி அவர்கள் திருமணத்துக்கான ஏற்பாடுகள் வாலாஜாபேட்டையில் விறுவிறுப்பாக நடைபெற்றது. அந்த வகையில், வாலாஜாபேட்டை அல்லிக்குளம் பகுதியிலிருக்கும் திருமண மண்டபத்தில், கைகளில் மெஹந்தி, வளையல்கள் அலங்கரிக்க புடவை உடுத்தி மணமேடையில் அமர்ந்த பட்ரிசியாவின் கழுத்தில் தாலி கட்டி மணமாலை சூடினார் திருமால்பிரசாத்.

ALSO READ | தமிழகத்தில் அடுத்த 2 நாள்களுக்கு கனமழை - வானிலை மையம் தகவல்

கூடியிருந்த உறவினர்களும், நண்பர்களும் மலர்த்தூவி இருவரையும் வாழ்த்தினர். மணக்கோலத்திலிருந்த பட்ரிசியாவைப் பார்த்து, ‘தமிழ்நாட்டின் மருமகளே!’ என்றும் அவரை ஆசையோடு வரவேற்று மகிழ்வித்தனர். இதையடுத்து, வாலாஜாபேட்டை பத்திரப்பதிவு அலுவலகத்தில் திருமணத்தை பதிவு செய்து கொண்டனர்.

செய்தியாளர்: க.சிவா (ராணிப்பேட்டை)
Published by:Anupriyam K
First published:

Tags: Love, Lovers, Marriage, Nigeria, Ranipettai

அடுத்த செய்தி