ஹோம் /நியூஸ் /Ranipet /

பிறந்து 40 நாட்களே ஆன பச்சிளங்குழந்தையை பக்கெட் நீரில் மூழ்கடித்து கொன்ற கொடூரம் - தாயும் மகளும் கொடுத்த பரபரப்பு வாக்குமூலம்

பிறந்து 40 நாட்களே ஆன பச்சிளங்குழந்தையை பக்கெட் நீரில் மூழ்கடித்து கொன்ற கொடூரம் - தாயும் மகளும் கொடுத்த பரபரப்பு வாக்குமூலம்

பச்சிளங்குழந்தை கொலை

பச்சிளங்குழந்தை கொலை

Ranipettai : ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே ஒன்றும் அறியாத அப்பாவி சிசுவை ஈவு இரக்கம் இல்லாமல் தண்ணீரில் அமுக்கி கொலை செய்த அத்தையை போலீசார் கைது செய்தனர்.

 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :

  அரக்கோணம் அருகே சொத்து தகராறால் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக பிறந்து 40 நாட்களே ஆன பச்சிளங்குழந்தையை சொந்த அத்தையும், மகளும் சேர்ந்து பக்கெட் நீரில் மூழ்கடித்து கொன்ற கொடூர சம்பவத்தில், இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களின் வாக்கு மூலத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

  ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தோல்ஷாப் பகுதியைச் சேர்ந்தவர் இளமதி. இவரது  மகன் மனோ(22). பூக்கட்டும் தொழிலாளி. இவருக்கும் அம்மூர் பகுதியைச் சேர்ந்த அம்சாநந்தினி (21) என்பவருக்கும் 3  ஆண்டுகளுக்கு திருமணம் நடந்தது. அந்த தம்பதிக்கு கடந்த ஒன்னரை மாதங்களுக்கு முன்பு அழகிய ஆண் குழந்தை பிறந்தது.

  சில ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை பிறந்ததால் உறவினர்களும், நண்பர்களும் அடிக்கடி வீட்டுக்கு வந்து குழந்தையை பார்த்து வந்தனர். இந்நிலையில், கடந்த 4ஆம் தேதியன்று அதிகாலையில் அம்சா தூங்கி எழுந்த போது அருகில் படுக்க வைத்திருந்த குழந்தையை காணாமல் போனதை கண்டு அலறி போயுள்ளார்.

  கணவரும், குடும்பத்தினரும் தேடிப்பார்த்த போது கழிவறையில் இருந்த வாளி தண்ணீரில் மூழ்கிய  நிலையில் குழந்தை இறந்து கிடந்தது. இது அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. பிறந்து 45 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை  தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்தது யார்? என்ற கேள்வி எழுந்தது. குடும்பத்தகராறு, சொத்து விவகாரம் என்று போலீசார் விசாரணையை தொடங்கினர். இதில் பலதிடுக்கிடும் தகவல்கள்  வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின.

  “மனோவின் அப்பா ராமு பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அவருக்கு சொந்தமான வீடு தோல்ஷாப் பகுதியில் உள்ளது. ராமு இறந்த பிறகு வீடு தனக்கு  கிடைத்து விடும் என்று ராமுவின் சகோதரி தேன்மொழி ஆசையாக இருந்துள்ளார். ஆனால், ராமு இறந்தாலும், அவரது மனைவி இளமதி, வீட்டு வேலை செய்து மனோவை வளர்த்துள்ளார். வளர்ந்த பின் மனோவும் பூக்கட்டும் வேலைக்கு சென்றதால் அந்த வருவாயில் குடிசை வீட்டை விரிவுபடுத்தி இருக்கிறார்கள்.

  இது தேன்மொழிக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மனோவுக்கு தனது மகள் பாரதியை திருமணம் முடித்து வைக்கலாம். இதனால், சொத்து நமக்கு வரும் என்று  நினைத்துள்ளார். ஆனால் அதுவும் நடக்கவில்லை. இதனால், மனோ மற்றும் அவரது குடும்பத்தினர் மீது தேன்மொழி வெறுப்புடன் இருந்துள்ளார்.

  அதேநேரத்தில் அப்பகுதியில் தேன்மொழியும், பாரதியும் தங்களுக்கு சாமி அருள் உண்டு என்றுகூறி சாமியாடி மந்திரிப்பது, விபூதி அடிப்பது போன்ற செயல்களிலும் ஈடுபட்டுள்ளனர். அப்படி அடிக்கடி சாமி  வந்தது போன்று ஆட்டம் போட்டு வெறுப்பை மனதில் வைத்துக்  கொண்டு குறி சொல்வது போல பாசாங்கு செய்து மனோவின் மனைவி அம்சாவையும், இளமதியையும் சரமாரியாக தாக்கியும் வந்துள்ளனர்.

  பல காரணங்களை சொல்லி குடும்பத்தை பிரிக்க சூழ்ச்சி  செய்துள்ளனர். இந்நிலையில் தான் மனோவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதுவும்  அவர்களுடைய குடும்பத்திலேயே இந்த குழந்தை தான் முதல் ஆண் வாரிசு. இதனால் உறவினர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். இது இருவரையும் ஆத்திரத்தின் உச்சத்துக்கே கொண்டு சென்றிருக்கிறது.

  சம்பவம் நடந்த அன்று இரவு  தேன்மொழியும், பாரதியும்தான் அங்கே இருந்துள்ளனர். அனைவரும் தூங்கச் சென்ற பிறகு தாய் அருகே படுத்திருந்த ஒன்றும் அறியாத அப்பாவி சிசுவை ஈவு இரக்கம்  இல்லாமல் தண்ணீரில் அழுக்கி கொலை செய்திருக்கிறார்கள். அவர்கள் இரவில் மனோ வீட்டில் தங்கியிருந்ததால் அவர்களிடம் முதற்கட்ட விசாரணை மேற்கொண்ட போலீசார், முன்னுக்குப் பின் முரணாக பதில் அளிக்கவே சந்தேகமடைந்த போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

  இதனைத் தொடர்ந்து வேலூர் சரக டிஐஜி விஜயா முன்னிலையில் நடைபெற்ற கிடுக்கிப்பிடி விசாரணையில், சொத்தின் மீது கொண்ட ஆசையால் ஏற்பட்ட விரோதத்தாலும், ஆண் குழந்தை பிறந்ததால் ஏற்பட்ட வெறுப்பாலும் பச்சைக் குழந்தையை ஈவு இரக்கமின்றி பக்கெட் நீரில் மூழ்கடித்து கொலை செய்துவிட்டு ஒன்றும் தெரியாததுபோல் நாடகமாடியது தெரியவந்தது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அண்ணனின் வீடு கிடைக்காத ஏமாற்றமும், ஏற்கெனவே வேறு ஒருவருடன் திருமணமாகி கணவரை பிரிந்து, தனது மகள் வீட்டில் இருக்கும் நிலையில் தேன்மொழி அண்ணன் மகன் குடும்பம் சந்தோஷத்துடன் இருப்பதைப் பார்த்து பொறாமையில், மகள் பாரதி உதவியுடன் இந்த கொடூர கொலையை செய்துள்ளனர் என்பதும் அவர்களின் வாக்குமூலத்தில் தெரியவந்தது.

  Must Read : தப்பித் தவறிகூட ஆதீனத்தை தொட்டு விடாதீர்கள்... விளைவுகள் பயங்கரமாக இருக்கும் - அண்ணாமலை எச்சரிக்கை

  இதனைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீசார், இருவர்  மீதும் வழக்கு பதிவு செய்து அரக்கோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவர்களை வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  செய்தியாளர் - க.சிவா, ராணிப்பேட்டை.

  Published by:Suresh V
  First published:

  Tags: Arakkonam, Crime News, Murder, Ranipettai