ஹோம் /நியூஸ் /ராணிப்பேட்டை /

அரக்கோணம் திமுக பிரமுகர் கொலை வழக்கு.. துப்பாக்கி முனையில் 4 பேர் கைது!

அரக்கோணம் திமுக பிரமுகர் கொலை வழக்கு.. துப்பாக்கி முனையில் 4 பேர் கைது!

மாதிரி படம்

மாதிரி படம்

Arakkonam DMK person murder case | போலீசார் வருவதை பார்த்து அதில் 2 பேர் தப்பியோடினர். இதையடுத்து, அந்த கும்பலில் 4 பேரை தனிப்படை போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Ranipettai (Ranipet), India

  அரக்கோணம் காவல்நிலையத்தில் திமுக பிரமுகரை கொலை செய்த வழக்கில் துப்பாக்கி முனையில் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

  தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தவின்பேரில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆப்ரேஷன் மின்னல் வேட்டை மூலம் ரவுடிகளை போலீசார் தேடி வந்தனர்.

  அதன்படி ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் எஸ்பி தீபா சத்யன் தலைமையில் அரக்கோணம் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் சாலமன் உள்ளிட்ட 6க்கும் மேற்பட்ட  தனிப்படை போலீசார் 10க்கும் மேற்பட்ட குற்றவாளிகளை  தேடி வந்தனர்.

  இந்நிலையில், அரக்கோணம் காவல்நிலையத்தில் திமுக பிரமுகரை கொலை செய்த வழக்கில் தலைமறைவான குற்றவாளிகள் ஆவடி ஆணையரகத்திற்கு உட்பட்ட அம்பத்தூர் சூரப்பட்டு அருகே பதுங்கியிருப்பதாக  தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

  இதையும் படிங்க : மாணவன் தற்கொலை.... ஆதாரங்கள் இல்லாமல் ஆசிரியரை குற்றஞ்சாட்டக்கூடாது- நீதிமன்றம் அறிவுறுத்தல்

  அதன்பேரில் தனிப்படை போலீசார் அம்பத்தூர் சூரப்பட்டு அருகே சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்கு 6 பேர் கொண்ட கும்பல் இருந்தது. போலீசார் வருவதை பார்த்து அதில் 2 பேர் தப்பியோடினர். இதையடுத்து, அந்த கும்பலில் 4 பேரை தனிப்படை போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.

  இதனைத்தொடர்ந்து கைதான 4 பேரையும் ராணிப்பேட்டைக்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்த பிறகே விவரங்கள் தெரியவரும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Published by:Karthi K
  First published:

  Tags: Crime News, Ranipettai