முகப்பு /செய்தி /ராணிப்பேட்டை / அரக்கோணம் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்தவர்கள் மீது கார் மோதி விபத்து: 3 பேர் உயிரிழப்பு

அரக்கோணம் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்தவர்கள் மீது கார் மோதி விபத்து: 3 பேர் உயிரிழப்பு

சாலை மறியல் போராட்டம்

சாலை மறியல் போராட்டம்

Ranipet district News : அரக்கோணம் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்தவர்கள் மீது கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்தனர். இதனால் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் 5 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Ranipettai (Ranipet), India

வேலூர் மாவட்டம் பணவட்டம் பாடியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர், வேலூர் அரசு பணிமனையில் பணியாற்றி வருகிறார். இவர் தனது மனைவியுடன் அரக்கோணத்தில் உள்ள மனைவி வீட்டிற்கு காரில் வேகமாக சென்று கொண்டிருந்தார்.  அந்த கார் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த எஸ்.ஆர். கண்டிகை பேருந்து நிலையம் அருகே வந்தபோது அவரின் கட்டுப்பாட்டை இழந்தது.

அப்போது பேருந்து நிறுத்தத்தின் அருகே நின்றிருந்த அதே கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் (43), கன்னியப்பன் (60) மற்றும் உண்ணாமலை குமாரி (55) ஆகிய மூன்று பேர் மீதும் வேகமாக மோதியது. இதில் மூன்று பேரும் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதையறிந்து கதறி அழுதுகொண்டே ஓடிவந்த உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சம்பவ இடத்தில் கூடினர். பின்னர், உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு அரசு நிதி மற்றும் சாலையில் வேகத்தடை ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக அரக்கோணம் சோளிங்கர் சாலையில் 5 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த அரக்கோணம் டி.எஸ்.பி. பிரபு, அரக்கோணம் வட்டாட்சியர் பழனி ராஜன் உள்ளிட்டோர் அர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர் ஆனால், சுமுகம் ஏற்படவில்லை. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கைத்தறி மற்றும் துறை அமைச்சர் ஆர்.காந்தி மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சத்யன் உள்ளிட்டோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அப்போது, இறந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி மற்றும் அரசு சார்பில் உரிய இழப்பீடு பெற்று தருவதாக தெரிவித்ததை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இந்த மறியல் காரணமாக அரக்கோணம் சோளிங்கர் நெடுஞ்சாலையில் பல கிலோமீட்டர் தொலைவிற்கு வகானங்கள் அணிவகுத்து நின்றன.

Must Read : பைக்குடன் பற்றி எரிந்த நெல் வியாபாரி.. சாவில் மர்மம்

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலை கைப்பற்றிய போலீசார் அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.  மேலும், விபத்து குறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

top videos

    செய்தியாளர் - க.சிவா.

    First published:

    Tags: Arakkonam, Car accident, Protest, Ranipettai