முகப்பு /செய்தி /ராமநாதபுரம் / இம்மானுவேல் சேகரனார் நினைவேந்தல்: ரயில் மீது ஏறி கொடி அசைத்த இளைஞர்.. மின்சாரம் தாக்கி விபரீதம்

இம்மானுவேல் சேகரனார் நினைவேந்தல்: ரயில் மீது ஏறி கொடி அசைத்த இளைஞர்.. மின்சாரம் தாக்கி விபரீதம்

ரயில் மீது ஏறிய இளைஞர்

ரயில் மீது ஏறிய இளைஞர்

முகேஷ் (20) என்பவர், ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த திருச்சி ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலின் என்ஜினில் மீது ஏறி கொடி அசைக்க முற்பட்டுள்ளார்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடைபெற்ற இமானுவேல் சேகரன் நினைவேந்தலுக்கு வந்த இளைஞர் ஒருவர், ரயில் மீது ஏறி கொடியை அசைத்த போது மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இம்மானுவேல் சேகரனாரின் 65வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சமுதாய தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அஞ்சலி செலுத்திவிட்டு ஒரு குழுவினர் ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளனர். அப்போது தேவகோட்டை பனிப்புலான் வயல் கிராமத்தைச் சேர்ந்த முகேஷ் (20) என்பவர், ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த திருச்சி ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலின் என்ஜினில் மீது ஏறி கொடி அசைக்க முற்பட்டுள்ளார். அவர் கையில் வைத்திருந்த கொடி மின் கம்பியில் பட்டதில் அவர், மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.

' isDesktop="true" id="800064" youtubeid="NCq_bt4grKU" category="ramanathapuram">

இதையும் வாசிக்க: “மின்கட்டண உயர்வு.. வேறு வழியில்லை" - தமிழ்நாடு மின்வாரியம் விளக்கம்

இதனையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த அவரை ரயில்வே போலீசார் மீட்டு பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

செய்தியாளர், வீரகுமரன் பொன்னுசாமி- ராமநாதபுரம்

First published:

Tags: Electric Train, Ramanathapuram