முகப்பு /செய்தி /Ramanathapuram / நட்புக்காக...!! நண்பன் பிரிவை தாங்கமுடியாத மனவேதனையில் விபரீத முடிவு எடுத்த இளைஞர்.

நட்புக்காக...!! நண்பன் பிரிவை தாங்கமுடியாத மனவேதனையில் விபரீத முடிவு எடுத்த இளைஞர்.

’இத்தனை நாளா என்னால ஜெயிக்க முடியும்னு தப்பா நினைச்சிட்டேன்’.. நீட் தேர்வு பயத்தால் மாணவன் வீடியோ வெளியிட்டு தற்கொலை...

’இத்தனை நாளா என்னால ஜெயிக்க முடியும்னு தப்பா நினைச்சிட்டேன்’.. நீட் தேர்வு பயத்தால் மாணவன் வீடியோ வெளியிட்டு தற்கொலை...

நண்பன் தற்கொலையால், மனம் உடைந்த நண்பன் தானும் தற்கொலை செய்து கொண்டார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள தலைக்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் பிரசாந்த். இவர் பரமக்குடி பேருந்து நிலையம் அருகே உள்ள லாட்ஜ் அறையில் தங்கியிருந்த ரூமில் உட்புறமாக பூட்டி  கொண்டு தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். பரமக்குடி நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் பெயரில் லாட்ஜிற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு  உடலை ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

பின்பு போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் திருச்சியில் அவருடன் வேலை பார்த்த நண்பர் ஒருவர் நான்கு நாட்களுக்கு முன்பு குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளார். அதிலிருந்து மனம் பேதலித்த நிலையில் இருந்தவர் சொந்த ஊரான தலைக்கால்  கிராமத்திற்கு செல்வதற்காக நேற்று மதியம் பரமக்குடிக்கு வந்துள்ளார்.

அவருடைய நண்பர் சென்னையில் வேலை பார்த்து வரும் பூபதி என்பவரிடம் பரமக்குடியில் உள்ள தனியார் லாட்ஜில் ரூம் எடுத்து தங்கி விட்டு பின்னர் தலைக்கால் செல்ல இருப்பதாகக் தகவல் கூறியுள்ளார் என்று கூறப்படுகிறது.

Also see... ஒன்பது மாதங்கள் கழித்து குடும்பத்துடன் இணைந்த 75 வயது மூதாட்டி... கண்டுபிடித்து கொடுத்த அரசு மருத்துவமனை மருத்துவர்கள்

அதன்படி  பரமக்குடி அருகே உள்ள தனியார் லாட்ஜில் ரூம் எடுத்து தங்கி உள்ளார். நண்பன் இறந்த சோகம் காரணமாக மனவேதனையில் இருந்த அவர் தனது பையில் வைத்திருந்த போர்வையால் அறையின் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் விசாரணையில் தெரிய வருகிறது. மேலும் இந்த தற்கொலை குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

செய்தியாளர்: பொ. வீரக்குமரன், பரமக்குடி 

First published:

Tags: Crime News, Sucide