Home /News /ramanathapuram /

அரசு நடத்தும் மணல் குவாரியில், தனியார் பங்களிப்பு ஏன்? நீதிமன்றம் சரமாரி கேள்வி!

அரசு நடத்தும் மணல் குவாரியில், தனியார் பங்களிப்பு ஏன்? நீதிமன்றம் சரமாரி கேள்வி!

மணல் குவாரி

மணல் குவாரி

மணல் குவாரிக்கு அனுமதி வழங்கி இருக்கக் கூடாது எனவும் மணல் குவாரி அமைப்பதற்கு நீதிமன்றங்கள் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது நிலையில் மாவட்ட நிர்வாகம் புதுவிதிகளை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்தனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Madurai, India
    பொதுமக்களின் கருத்தை கேட்காமல், மணல் குவாரி அமைப்பதற்கு அனுமதி வழங்கியது யார்? என மாவட்ட நிர்வாகத்திடம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி ஏழுப்பியுள்ளது.

    இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கருணாநிதி என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “இராமநாதபுரம் மாவட்டம் இயற்கையாகவே வானம் பார்த்த பூமி, இப்பகுதி மக்கள் விவசாயத்திற்கும் குடிநீருக்கும் கிடைக்கும் ஆதாரத்தை பயன்படுத்தி கடினமான சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

    இந்நிலையில் கடலாடி அருகே உள்ள கே.வேப்பங்குளம் கிராமத்தில் 4.95 ஹெக்டர் பரப்பளவில் மலட்டாறு பகுதியில் புதிய மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த மணல் குவாரிக்கான அனுமதியை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் 02.05.2022 அன்று வழங்கியுள்ளார். மேலும் உரிய கள விசாரணை செய்யாமலும் பொதுமக்களிடம் கருத்து கேட்காமலும் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் தவறான அறிக்கையை சமர்ப்பித்து இந்த மணல் குவாரிக்கு அனுமதியை வழங்கியுள்ளனர்.

    மணல் குவாரி அமைந்துள்ள கே.வேப்பங்குளம் அருகில் ஐந்திற்கும் மேற்பட்ட போர்வெல் மற்றும் கிணறுகள் அமைத்து அதில் கிடைக்கும் தண்ணீர் தான் சுற்றியுள்ள கிராமங்களுக்கு  வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது மணல் குவாரி அமைக்கப்பட்டுள்ளதால் தண்ணீர் வினியோகம் தடைபடும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வழங்கியுள்ள மணல் குவாரிக்கான உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்." என குறிப்பிட்டிருந்தார்.

    இதையும் வாசிக்க: தென்காசியில் தீண்டாமையால் மாணவர்களுக்கு தின்பண்டங்கள் மறுப்பு... மதுரையில் இருந்து 5 கிலோ தின்பண்டங்களை அனுப்பிய சமூக ஆர்வலர்கள்

    இந்த மனு நீதிபதிகள் R.மகாதேவன் , J. சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், பொது மக்களின் கருத்தை கேட்காமல் மணல் குவாரி அமைப்பதற்கு உத்தரவு பிறப்பித்தது யார்? எனவும் அரசு நடத்தும் மணல் குவாரியில், தனியார் பங்களிப்பு ஏன்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    மணல் குவாரிக்கு அனுமதி வழங்கி இருக்கக் கூடாது எனவும் மணல் குவாரி அமைப்பதற்கு நீதிமன்றங்கள் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது நிலையில் மாவட்ட நிர்வாகம் புதுவிதிகளை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும் அரசு தரப்பில் விதிக்கப்பட்ட விதிகள் குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் உரிய  தகவல் பெற்று தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 20 ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
    Published by:Siddharthan Ashokan
    First published:

    Tags: District collectors, Madurai High Court, Ramanathapuram

    அடுத்த செய்தி