ஹோம் /நியூஸ் /ராமநாதபுரம் /

பசும்பொன்னில் இன்று தேவர் குருபூஜை.. மாவட்டத்தில் குவிந்த போலீஸ் படை..!

பசும்பொன்னில் இன்று தேவர் குருபூஜை.. மாவட்டத்தில் குவிந்த போலீஸ் படை..!

தேவர் ஜெயந்தி

தேவர் ஜெயந்தி

டிஜிபி சைலேந்திர பாபு தலைமையில் பசும்பொன்னில் 10,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Ramanathapuram | Ramanathapuram | Kamuthi | Tamil Nadu

  முத்துராமலிங்க தேவரின் 115வது ஜெயந்தி விழா இன்று நடைபெறுவதையொட்டி, பசும்பொன்னில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

  ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்த பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் 115வது ஜெயந்தி மற்றும் 60வது குருபூஜை விழா கடந்த வெள்ளிக்கிழமை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.

  இந்நிலையில் இன்று நடைபெறும் ஜெயந்தி விழாவில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்கின்றனர். முதுகுவலி காரணமாக நீண்ட தூர பயணத்தை தவிர்க்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதால், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பசும்பொன்னுக்கு செல்லவில்லை.

  தமிழ்நாடு அரசு தரப்பில் அமைச்சர்கள் துரைமுருகன், நேரு, பெரியசாமி, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகின்றனர்.

  அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில், முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்த உள்ளனர்.

  இந்நிலையில், டிஜிபி சைலேந்திர பாபு தலைமையில் பசும்பொன்னில் 10,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முக்கிய இடங்களில் 94 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Muthuramalinga Thevar, Ramanathapuram, Thevar Jayanthi