முகப்பு /செய்தி /Ramanathapuram / குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டும் ஹவுஸ்ஓனர்.. இளம்பெண் பரபரப்பு புகார் - பரமக்குடியில் அதிர்ச்சி சம்பவம்

குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டும் ஹவுஸ்ஓனர்.. இளம்பெண் பரபரப்பு புகார் - பரமக்குடியில் அதிர்ச்சி சம்பவம்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Crime : பரமக்குடியில் வீட்டு உரிமையாளர் கந்துவட்டி கேட்டு மிரட்டுவதாகவும், குளியலறையில் செல்போன் மறைத்து வைத்து வீடியோ எடுத்து மிரட்டுவதாக பெண் பரபரப்பு புகார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

பரமக்குடியில் வீட்டு உரிமையாளர் இளம்பெண் குளிப்பதை செல்போன் மறைத்து வைத்து வீடியோ எடுத்து மிரட்டுவதாக  பரபரப்பு புகார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்தவர் தமிழ்மணி. இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.  இவர் தனது  மனைவியை பரமக்குடியில் ரூ.2 லட்சத்துக்கு ஒத்திக்கு வீடு எடுத்து தங்கி வைத்துள்ளார். கடந்த ஓராண்டாக இவரது குடும்பத்தினர் அந்த வீட்டில் வசித்து வருகின்றனர்.  ஒத்திக்கு கொடுத்த பணத்திற்கு வீட்டு உரிமையாளர் எந்த ஆவணமும் எழுதி தரவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடனாக வீட்டு உரிமையாளரிடம் ரூ.50 ஆயிரத்தை  பெற்றுள்ளனர்.  இந்த கடனுக்காக மட்டும் வெற்று புரோ நோட்டில் அவரது மனைவி கையெழுத்திட்டுள்ளார்.

ஒத்தி பத்திரம் எழுதும் போது அந்த புரோ நோட்டை தருவதாக கூறியுள்ளார். இதற்கிடையில் தமிழ்மணியின் மனைவி 10 வட்டிக்கு ரூ. 3 லட்சம் ரூபாய் கடனாக வீட்டு உரிமையாளரிடம் பெற்றுள்ளார்.  கடனை திருப்பிக்கேட்டு அடிக்கடி வீட்டிற்கு வந்த உரிமையாளர் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அந்தப்பெண் குளிப்பதை மறைமுகமாக செல்போனில் படம் பிடித்த வீட்டு உரிமையாளர் அந்த வீடியோவை காட்டி தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார். நாளுக்கு நாள் அவரின் அத்துமீறல்கள் அதிகரித்துள்ளது.

Also Read:  திருநங்கைக்கு செக்ஸ் டார்சர் கொடுத்த சமையல் மாஸ்டர் அடித்துக்கொலை - கோவையில் அதிர்ச்சி

மேலும் அந்த வீடியோவை வெளிநாட்டில் வேலை பார்க்கும் உன் கணவருக்கு அனுப்பி விடுவேன் என மிரட்டி பணம் நகைகளை பறித்து வந்துள்ளார். நகைகளை அடகு வைத்து இதுவரை ரூ.16.90 லட்சம் பறித்துவிட்டதாகவும் வீட்டை காலி செய்ய விடாமலும், ரூ.15 லட்சம் பொருட்களை எடுக்க விடாமலும் அடியாட்களை வைத்து தடுத்து வருவதாகவும் தொடர்ந்து பாலியல் தொல்லை தரும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப்பெண்  ராமநாதபுரம் எஸ்.பி மற்றும் பரமக்குடி காவல் துணை கண்காணிப்பாளரிடம் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

செய்தியாளர்: கு.தமிழ்ச்செல்வன் (பரமக்குடி)

First published:

Tags: Crime News, Ramanathapuram, Rape threat, Sexual abuse, Woman