முகப்பு /செய்தி /ராமநாதபுரம் / குறுக்கே வந்த காட்டுப்பன்றி.. பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்து.. ஓட்டுநர் பலி!

குறுக்கே வந்த காட்டுப்பன்றி.. பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்து.. ஓட்டுநர் பலி!

கவிழ்ந்த நிலையில் ஆட்டோ

கவிழ்ந்த நிலையில் ஆட்டோ

பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள்  கமுதி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் கமுதி அருகே பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் உயிரிழந்த நிலையில் 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள முத்துப்பட்டி, பெருமாள்தேவன் பட்டி, மூலக்கரைப்பட்டி, வடுகபட்டி, உள்ளிட்ட கிராமங்களில் இருந்து வழக்கமாக பள்ளி மாணவ மாணவிகளை கமுதியில் உள்ள பள்ளிகளுக்கு ஏற்றி வந்த ஆட்டோ  விபத்திற்கு உள்ளானது. பெருமாள்தேவன் பட்டி பகுதியில் திடீரென சாலையின் குறுக்கே வந்த காட்டுப்பன்றி ஆட்டோ மீது மோதியதால் சம்பவ இடத்திலேயே ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் ஆட்டோ ஓட்டுநர் உயிருக்கு போராடிய நிலையில் கமுதி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அதேபோல் விபத்தில் படுகாயம் அடைந்த பள்ளி மாணவர்களும் அரசு மருத்துவமனைக்கு செல்லப்பட்டனர். இதைதொடர்ந்து சிகிச்சை பலனின்றி முத்துப்பட்டியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் நல்லமருது (35)  உயிரிழந்தார்.

பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கமுதி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மூன்று மாணவர்கள் சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டனர்.

First published:

Tags: Accident, Auto Driver, School students