Home /News /ramanathapuram /

ராமநாதபுரத்தில் கார் கண்ணாடியை உடைத்து ரூ3 லட்சம் கொள்ளை... திடுக்கிடும் சிசிடிவி காட்சிகள்

ராமநாதபுரத்தில் கார் கண்ணாடியை உடைத்து ரூ3 லட்சம் கொள்ளை... திடுக்கிடும் சிசிடிவி காட்சிகள்

கார் கண்ணாடியை உடைத்து பணம் திருட்டு

கார் கண்ணாடியை உடைத்து பணம் திருட்டு

Ramanathapuram | இராமநாதபுரம் அருகே ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூபாய் மூன்று லட்சம் ரொக்க பணம் காரில் இருந்து திருட்டப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India
    ராமநாதபுரத்தில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த காரின் கண்ணாடியை உடைத்து ரூ 3 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்து சென்றுள்ளது ஒரு கும்பல் .திடுக்கிடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

    ராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் பகுதியைச் சார்ந்தவர் பிரபல ரியல் எஸ்டேட் அதிபர் பழனியப்பன்‌. வியாழக்கிழமை வழக்கம் போல் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு சென்று விட்டு புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பிரபல ஹோட்டலில் உணவு அருந்துவதற்காக சென்றுள்ளார். மீண்டும் வந்து பார்த்த போது காரின் பின் கண்ணாடி உடைக்கப்பட்டு காரில் இருந்த ரூ 3 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

    இதை பார்த்து அதிர்ச்சியடைந்த தொழிலதிபர் பழனியப்பன் கேணிக்கரை போலீசாருக்கு புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வத்த போலீசார் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு மேற்கொண்டனர். அதில் பழனியப்பன் காரில் வந்த போது இருவர் இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்துள்ளனர்.

    Also Read : திமுக எம்.எல்.ஏ.க்கள் தன்னுடன் பேசுவதாக எடப்பாடி பழனிச்சாமி காமெடி செய்கிறார் : முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி

    பழனியப்பன் காரில் இருந்து இறங்கியதும் காரின் பின்பக்க ஜன்னல் கண்ணாடியை உடைத்தவர்கள் ஜன்னல் வழியாக காரின் உள்ளே குதித்து ,காரின் உள்ளே இருந்த ரூ 3 லட்சத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். மேலும் கிடைத்த சிசிடிவி காட்சியில் கொள்ளையர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பிச்செல்லும் காட்சிகளும் பதிவாகியுள்ளது. வாகன எண்ணை பெற்றுள்ள போலீசார் வாகன எண்ணின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

     
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Crime News, Ramanathapuram

    அடுத்த செய்தி