ஹோம் /நியூஸ் /ராமநாதபுரம் /

மாடு குறுக்கே வந்ததால் பைக்குடன் கால்வாய்க்குள் விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு.. ராமநாதபுரத்தில் சோகம்!

மாடு குறுக்கே வந்ததால் பைக்குடன் கால்வாய்க்குள் விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு.. ராமநாதபுரத்தில் சோகம்!

கால்வாய்க்குள் விழுந்த தம்பதி

கால்வாய்க்குள் விழுந்த தம்பதி

தண்ணீருக்குள் விழுந்த கர்ப்பிணி பெண் மீது இருசக்கர வாகனம் விழுந்ததால் மீண்டு எழமுடியாமல் நீரிலேயே மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Ramanathapuram | Ramanathapuram | Tamil Nadu

  ராமநாதபுரம் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்த கர்ப்பிணி மாடு குறுக்கே வந்ததால் கால்வாய்க்குள் விழுந்து தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

  ராமநாதபுரம் மாவட்டம் கோனாகுளம் கிராமத்தை சேர்ந்த பிரபாகரன்(27) என்பவருக்கும், அண்டக்குடி கிராமத்தை சேர்ந்த சூரிய பிரியதர்ஷினி (23) என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

  இந்த நிலையில், கணவன் - மனைவி இருவரும் நேற்று முன் தினம் இரவு இருசக்கர வாகனத்தில் அண்டக்குடி கிராமத்திலிருந்து வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

  அப்போது கீழ்ப்பெருங்கரை கிராமம் அருகே வந்து கொண்டிருந்த போது திடீரென பைக்கின் குறுக்கே மாடு வந்ததால், பிரபாகரனின் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறிய இருசக்கர வாகனம் அருகே இருந்த கால்வாய்க்குள் பாய்ந்தது.

  இதையும் படிங்க | 17 வயது கொளுந்தியாவை 4 மாதம் கர்ப்பாமாக்கிய மாமன்.. திருச்சியில் பயங்கரம்!

  இதில், கர்ப்பிணியான பிரியதர்ஷினி தண்ணீருக்குள் விழுந்தார். அவர் மீது இருசக்கர வாகனம் விழுந்ததால் மீண்டு எழமுடியாமல் நீரிலேயே மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

  தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், படுகாயமடைந்த பிரபாகரனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, பிரியதர்ஷினியின் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Accident, Death, Ramanathapuram