ஹோம் /நியூஸ் /ராமநாதபுரம் /

பாம்பன் பாலத்தில் பேருந்துகள் மோதி விபத்து.. நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள்..!

பாம்பன் பாலத்தில் பேருந்துகள் மோதி விபத்து.. நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள்..!

விபத்து

விபத்து

பாம்பன் பாலத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மோதி விபத்து. இந்த விபத்தில் இரு பேருந்துகளும் சுக்குநூறாக நொறுங்கியது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Rameswaram | Tamil Nadu

  ராமேஸ்வரம் அருகே பாம்பன் பாலத்தில் அரசு பேருந்தும், தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் காயமடைந்தனர்.

  ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் சென்னையில் இருந்து வந்த தனியார் பேருந்தும் ராமேஸ்வரத்திலிருந்து மதுரைக்கு புறப்பட்ட அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

  அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தனியார் பேருந்து, பாம்பன் பாலத்தின் தடுப்புச் சுவர் மீது மோதி நின்றது. இதனை கண்டு அச்சமடைந்த அப்பகுதி மக்கள் பேருந்தில் இருந்த பயணிகளை பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து காயம் அடைந்த 5 பேரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  இதையும் படிங்க | ராமநாதபுரத்தில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு ஓவியப்போட்டி

  இந்த விபத்தில் இரு பேருந்துகளும் சுக்குநூறாக நொறுங்கியது. தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், பேருந்துகளை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தனியார் பேருந்து பாம்பன் பாலத்தின் சுவர் மீது மோதி நின்றதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Accident, Bus accident, Ramanathapuram, Rameshwaram