ஹோம் /நியூஸ் /ராமநாதபுரம் /

ராமேஸ்வரம் கடலில் புனித நீராடலா... கழிவு நீர் நீராடலா... பொதுநல வழக்கில் நீதிமன்றம் சரமாரி கேள்வி

ராமேஸ்வரம் கடலில் புனித நீராடலா... கழிவு நீர் நீராடலா... பொதுநல வழக்கில் நீதிமன்றம் சரமாரி கேள்வி

உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

Rameshwaram Sea News | ராமேஸ்வரம் கடலில் புனித நீராடலா? அல்லது கழிவு நீர்  நீராடலா? என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Madurai, India

ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் கழிவுநீர் கலப்பதை தடுக்க கோரிய பொது நல வழக்கு குறித்து நகராட்சி நிர்வாக துறை செயலர், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி  கோவில் இணை ஆணையர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த மார்க்கண்டன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், “ராமேஸ்வரத்தில் பழமையான ராமநாதசுவாமி  கோவில் அமைந்துள்ளது. ராமேஸ்வரத்தில் உள்ள தீர்த்தங்கள் கங்கை தீர்த்தத்திற்கு சமமானது எனக் கூறப்படுகிறது.

ராமேஸ்வரம் பகுதியில் உள்ளே மற்றும் வெளியே 64 தீர்த்தங்கள் உள்ளது. இதில், அக்னி தீர்த்தம் கோவிலின் வெளியே உள்ள கடல் பகுதியை குறிக்கும். ராமேஸ்வரத்தில் உள்ள தீர்த்தத்தில் நீராடுவதற்காக இந்தியா முழுவதும் இருந்து நாள்தோறும்  ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இதையும் படிங்க : டூ விலர் நோ.. வாகனத்தின் மேல் பயணிக்கக் கூடாது- தேவர் ஜெயந்தி, மருது பாண்டியர்கள் நினைவு நாள் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

ஆனால், ராமேஸ்வரம் கோவில் அருகே உள்ள அக்னி தீர்த்தம் கடல் பகுதியில் சாக்கடைகள், குப்பைகள் மற்றும் ராமேஸ்வரம் நகரின் கழிவு நீர் நேரடியாக  கடலில் கலக்கிறது. இதனால், ராமேஸ்வரம் கடற்கரை பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது.

ராமேஸ்வரம் பகுதியில் பாதாள சாக்கடை அமைக்க ரூ.52.60 கோடி ஒதுக்கப்பட்டது. 7 வருடங்கள் ஆகியும் இதுவரை 50% பணிகள் நடைபெற்று தற்போது பணிகளும் நடைபெறாமல் உள்ளது. இதுகுறித்து பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, ராமேஸ்வரம் கோவில் அருகே உள்ள அக்னி தீர்த்தம் கடல் பகுதியில் சாக்கடைகள், குப்பைகள் மற்றும் பல்வேறு நகரின் கழிவு நீர் நேரடியாக கலப்பதை தடுத்து உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்." என  கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் R. மகாதேவன்,  J.சத்தியநாராயணப் பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது ,மனுதாரர் தரப்பில் புகைப்படத்துடன் கூடிய ஆதாரங்கள்  தாக்கல் செய்யப்பட்டது. இதே கோரிக்கையுடன் உள்ள மற்றொரு வழக்கில் வழக்கறிஞர் ஆணையர்  நியமனம் செய்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வங்காள விரிகுடா கடலில் சாக்கடை தண்ணீர் கலப்பதை தடுக்க பல்வேறு வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதிகள், இதனை சரி செய்ய யார் நடவடிக்கை எடுக்க வேண்டும்? பல்வேறு நாடுகள் மற்றும் மாநிலங்களிலிருந்து மக்கள் ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்து செல்கின்றனர்.

இதையும் படிங்க : ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களின் கவனத்திற்கு... 28ம் தேதி உங்களுக்காக நடக்கிறது மீனவர் குறைதீர் கூட்டம்..

ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் பகுதியில் சாக்கடை கலப்பதை தடுக்க மாவட்ட நிர்வாகம் முறையான நடவடிக்கையை ஏன்  மேற்கொள்ளவில்லை. இந்தியா முழுவதும் இருந்து ராமேஸ்வரம்  அக்னிதீர்த்த கடலில் பக்தர்கள் புனித நீராட வருகிறார்களா? அல்லது ராமேஸ்வரம் நகரில் இருந்து கடலில் கலக்கும்  சாக்கடை கழிவு நீரோடு சேர்ந்து  நீராட வருகிறார்களா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும்ம், “ இதற்கு தீர்வு காண வேண்டும். மனுதாரரின் வழக்கு குறித்து நகராட்சி  துறை செயலர், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் இணை ஆணையர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒரு வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.

Published by:Karthi K
First published:

Tags: High court, Madurai, Ramanathapuram