ஹோம் /நியூஸ் /ராமநாதபுரம் /

தண்ணீர் கேனில் பக்கா பார்சலாக வந்த ரூ.300 கோடி போதைப்பொருள்.. மடக்கிப்பிடித்த போலீஸ்!

தண்ணீர் கேனில் பக்கா பார்சலாக வந்த ரூ.300 கோடி போதைப்பொருள்.. மடக்கிப்பிடித்த போலீஸ்!

தண்ணீர் கேன்களில் போதைப்பொருள் கடத்தல்

தண்ணீர் கேன்களில் போதைப்பொருள் கடத்தல்

குஜராத்தில் இருந்து வந்த இந்த தண்ணீர் கேன்கள், இலங்கைக்கு கடத்தப்படுவதாக விசாரணையில் தெரியவந்தது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Rameswaram | Ramanathapuram | Ramanathapuram

ராமேஸ்வரத்தில் இருந்து தண்ணீர் கேன்களில் உயர்ரக போதைப்பொருள் பவுடரை இலங்கைக்கு கடத்த முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை கடற்கரை சாலையில் நேற்று முன்தினம் இரவு கடலோர போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது, அந்த காரில் 25 லிட்டர் கொள்ளளவு கொண்ட 30 தண்ணீர் கேன்கள் இருந்தன. அந்த கேன்களிலும் வெள்ளை நிற பவுடர் நிரப்பப்பட்டு இருந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அந்த கேன்களை திறந்து அதில் இருந்த பவுடரை எடுத்து சோதனை செய்ததில், அது போதை பவுடர் என தெரியவந்தது. இதையடுத்து, அந்த போதை பவுடரை காரில் ஏற்றி வந்த கீழக்கரை சங்கிலி தெருவை சேர்ந்த நகராட்சி முன்னாள் துணைத்தலைவர் ஜெய்னுதீன் (45) மற்றும் அவரது தம்பி கவுன்சிலர் சப்ராஸ் நவாஸ்(42) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

மேலும், போதை பவுடர் கேன்கள் மற்றும் அதனை ஏற்றி வந்த ஆடம்பர காரை பறிமுதல் செய்தனர். பிடிப்பட்ட போதை பொருள் ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக பேசிய போலீசார், தண்ணீர் கேன்களில் நிரப்பி கொண்டு வந்தது, கொக்கேன் ரக போதை பவுடராக இருக்கலாம் என தெரியவருகிறது. இதன் மதிப்பு ரூ.300 கோடி இருக்கும். இலங்கைக்கு கடத்துவதற்காக நூதன முறையில் தண்ணீர் கேன்களில் அடைத்து வேதாளை கடற்கரை பகுதிக்கு காரில் கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தனர்.

இந்த கடத்தல் முயற்சியில் தொடர்புடைய மேலும் சிலரை தேடிவருவதாகவும், இலங்கையில் யாருக்கு அனுப்பி வைக்க இருந்தார்கள் என்பது தொடர்பான தகவல்கள் விரைவில் தெரியவரும் என கூறினர்.

மேலும், குஜராத் மாநிலத்தில் இருந்து உரம் என்று சென்னை வழியாக கொண்டு வந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

First published:

Tags: Local News, Ramanathapuram, Rameshwaram