ஹோம் /நியூஸ் /ராமநாதபுரம் /

ராமநாதபுரத்தில் இரு தரப்பினரிடையே தகராறு.. அரிவாளால் மூக்கை வெட்டிய கொடூரம்.. போர்க்களமான கிராமம்!

ராமநாதபுரத்தில் இரு தரப்பினரிடையே தகராறு.. அரிவாளால் மூக்கை வெட்டிய கொடூரம்.. போர்க்களமான கிராமம்!

சண்டையிட்ட பொதுமக்கள்

சண்டையிட்ட பொதுமக்கள்

Ramanathapuram conflict | 14 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Local18
  • 2 minute read
  • Last Updated :
  • Ramanathapuram | Ramanathapuram

முதுகுளத்தூர் அருகே கண்மாயில் தண்ணீர் பாய்ச்சியதை  சுட்டிகாட்டியதால் இருதரப்பினரிடையே கடும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள விக்கிரபாண்டியபுரம் ஊராட்சிக்குட்பட்டது சண்முகநாதபுரம் கிராமம். இந்த கிராமத்தில் காளியம்மாள் என்ற மூதாட்டி உயிரிழந்துள்ளார். இந்த கிராமத்தில் துக்க நிகழ்ச்சி ஏற்பட்டால் தண்ணீர் பாய்ச்சக்கூடாது என்பது வழக்கம்.

இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த வேல்முருகன் அங்குள்ள சின்னகண்மாயில் அவரது நெல் ஆயில் இஞ்சின்  மோட்டார் மூலம் தண்ணீர் பாய்ச்சி  கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது அவ்வழியாக சென்ற அதே ஊரை சேர்ந்த ராஜா என்பவர் சாடமாடையாக ஜெகதீசன் என்பவரிடம் ஊரில் துக்க நிகழ்ச்சி இருக்கும் பொழுது தண்ணீர் பாய்ச்சக் கூடாது என்று இருக்கும் போது இவர் மட்டும் தண்ணீர் பாய்ச்சுகிறார் என்று விமர்சித்துள்ளார்.

இதனை கேட்டு ஆத்திரமடைந்த வேல்முருகன், ராஜாவை அநாகரீகமாக பேசி அடித்து கீழே தள்ளியுள்ளார். அதற்கு ஒரு படி மேலாக சென்று வேல் முருகனின் அண்ணன் ஜோதி ராஜன், ராஜாவின் மூக்கில் அரிவாளால் வெட்டியுள்ளார்.

இதையும் படிங்க | ராமநாதபுரத்தில் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்ட பெண்கள்.. மதுப்பிரியர்கள் தலைத்தெறிக்க ஓட்டம்

மேலும், வேல்முருகனின் உறவினர்களான முத்துராமன், சாத்தையா உள்ளிட்ட 8 பேரும் சேர்ந்து ராஜா மற்றும் அவரது சகோதரர் முத்துராஜாவை கட்டையால் தாக்கிவிட்டு அரிவாளால் கை, கால்களில் வெட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதில் படுகாயமடைந்த 2 பேரும் சிகிச்சைக்காக கமுதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரு தரப்பினரிடையே ஏற்பட்ட இந்த பயங்கர மோதலில் காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து ராஜா கொடுத்த புகாரின் அடிப்படையில் 8 பேர் மீதும், ஜோதி ராஜன் அளித்த புகாரின் அடிப்படையில் 4 பேர் உட்பட 14 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்த ஜோதி ராஜன்,  முத்துராமன் உட்பட நான்கு பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணையில், கடந்த உள்ளாட்சித் தேர்தலில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக  இருதரப்பினர் சண்டையிட்டதாக  தெரிய வருகிறது.

செய்தியாளர்: சர்க்கரை முனியசாமி, ராமநாதபுரம்.

First published:

Tags: Crime News, Fight, Local News, Ramanathapuram, Ramnad, Viral Video