ஹோம் /நியூஸ் /ராமநாதபுரம் /

டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத சென்ற இளைஞர் பேருந்தில் இருந்து தவறிவிழுந்து பலி

டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத சென்ற இளைஞர் பேருந்தில் இருந்து தவறிவிழுந்து பலி

உயிரிழந்த கோபாலகிருஷ்ணன்

உயிரிழந்த கோபாலகிருஷ்ணன்

ராமநாதபுரத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத அரசு பேருந்தில் சென்ற இளைஞர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம்   சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Ramanathapuram, India

  தமிழக அரசு பணியாளர் தேர்வாணயம் நடத்தும் குரூப் 1 தேர்வுக்கான முதல்நிலை தேர்வு இன்று தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் நடைபெற்றது இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி கீழாய்குடி பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவர் குரூப் ஒன் தேர்வு எழுதுவதற்காக ராமநாதபுரம் நோக்கி அரசு பேருந்தில் வந்தார்,

  சத்திரக்குடி அருகே உள்ள சுங்க சாவடியில் கோபாலகிருஷ்ணன் பேருந்தில் இருந்து எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்துள்ளார்.இதில் சுங்கச்சாவடி அருகே அமைக்கப்பட்டுள்ள இரும்புக் கம்பி மார்பு பகுதியில் பட்டு காயம் ஏற்பட்டது.

  இதையும் படிக்க : பொறந்த குழந்தைய பார்க்க காசு கேட்குறாங்க..  அரசு மருத்துவமனை ஊழியர்களால் பொதுமக்கள் வேதனை

  இதனை அடுத்து உடனடியாக கோபாலகிருஷ்ணனை 108 ஆம்புலன்ஸ் மூலம் ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அப்போது சிகிச்சை பலனின்றி கோபாலகிருஷ்ணன் உயிரிழந்தார்.

  அவரது உடல் அரசு மருத்துவமனையில் உடல் கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது. குரூப் ஒன் தேர்வு எழுத சென்ற இளைஞர் அரசு பேருந்தில் இருந்து கீழே விழுந்து பலியான சம்பவம் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

  அரசு பேருந்தில் இருக்கையில் இருந்த கோபாலகிருஷ்ணன் கர்ப்பிணிப்பெண் ஒருவருக்கு இருக்கையை கொடுத்துவிட்டு படியில் நின்றுள்ளார். இதனால் அந்த கோர விபத்தில் கோபாலகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  Published by:Raj Kumar
  First published:

  Tags: Accident, Ramanathapuram, TNPSC, Toll gate