முகப்பு /செய்தி /ராமநாதபுரம் / 'கே.ஜி.எஃப்' பட பாணியில் கடலில் தங்கத்தை வீசிய கும்பல்..! மண்டபம் கடற்கரை பகுதியில் பிடிபட்ட கடத்தல்காரர்கள்!

'கே.ஜி.எஃப்' பட பாணியில் கடலில் தங்கத்தை வீசிய கும்பல்..! மண்டபம் கடற்கரை பகுதியில் பிடிபட்ட கடத்தல்காரர்கள்!

ராமநாதரபுரம்

ராமநாதரபுரம்

Ramanathapuram smuggling | சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த அதிகாரிகளை கண்ட கடத்தல் காரர்கள் தங்கத்தை நடு கடலில் வீசிவிட்டு தப்பி செல்ல முயன்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Ramanathapuram | Ramanathapuram

கன்னடத்தில் வெளியாகி வசூலை வாரிக்குவித்த திரைப்படம்  கேஜிஎப் 2. இந்தப்படத்தின் இறுதிக்காட்சியில் தான் சேர்த்துவைத்த தங்கக் கட்டிகளை நடுக்கடலுக்கு கொண்டு சென்று ஹீரோ கடலுக்குள் குதிப்பார். இப்படியான ஒரு சம்பவம் ராமநாதபுரத்தில் நடந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் தெற்கு கடற்கரை பகுதி அருகே தங்கம் கடத்துவதாக வந்த தகவலை தொடர்ந்து சோதனை செய்ததில் நடுக்கடலில் தங்கத்தை தூக்கி வீசிய மூன்று பேரை மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் தங்கம் கடத்தல் நடைபெற உள்ளதாக மத்திய வருவாய் புலனாய்வுத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் மற்றும் இந்திய கடலோர காவல் படையினர் மண்டபம் அருகே மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகத்திற்கு இடமாக விரைவாக வந்த நாட்டுப்படகை நிறுத்த எச்சரித்தபோது படகில் இருந்தவர்கள் சில பொருட்களை கடலில் வீசி உள்ளனர். விரைந்து சென்ற அதிகாரிகள் படகில் இருந்த நாகூர்மீரான் உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்தனர்.

கடலில் வீசப்பட்ட பொருட்களை மீட்க நீர்மூழ்கி வீரர்களை கொண்டு தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடலில் வீசப்பட்டது பல கோடி மதிப்பிலான தங்கமாக இருக்கக்கூடும் என முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் கைது செய்யப்பட்டுள்ள நாகூர்மீரான் மீது தங்கம் கடத்தல் தொடர்பான பல வழக்குகள் உள்ளது. மேலும் கைது செய்யப்பட்டுள்ள மூன்று பேரையும் மத்திய வருவாய் புலனாய்வுத்துறையினர் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர்: பொ. வீரக்குமரன், ராமநாதபுரம்.

First published:

Tags: KGF, Local News, Ramanathapuram, Smuggling