முகப்பு /செய்தி /ராமநாதபுரம் / பரமக்குடி : வேந்தோணி கிராமத்தில் ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் ஆலய கும்பாபிஷேக விழா

பரமக்குடி : வேந்தோணி கிராமத்தில் ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் ஆலய கும்பாபிஷேக விழா

கோவில் திருவிழா

கோவில் திருவிழா

ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் ஆலய கும்பாபிஷேக நிகழ்ச்சியினை திருப்பணி குழுவினர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Paramakudi, India

பரமக்குடி அருகே அருள்மிகு ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் ஆலய கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைப்பெற்றது. 

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் வேந்தோணி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் ஸ்ரீ கம்பாச்சி அம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. கடந்த 25ஆம் தேதி கணபதி பூஜை உடன் தொடங்கிய இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சி இன்று யாகசாலை   பூஜையுடன் தொடங்கியது.

அதனை தொடர்ந்து சிவாச்சாரியார் மந்திரத்தை முழங்க  கலசத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெற்று அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கலசபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்  நடைபெற்றது.

பின்னர் அன்னதானமும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் குலதெய்வ குடிமக்கள் கிராம பொதுமக்கள்  என ஏராளமானார் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியினை திருப்பணி குழுவினர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

செய்தியாளர்: கு.தமிழ்ச்செல்வன் (பரமக்குடி)

First published:

Tags: Local News, Ramanathapuram, Tamil News