முகப்பு /செய்தி /ராமநாதபுரம் / இரண்டே மாதத்தில் கசந்த காதல் திருமணம்.. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு - கண்ணீர்வடிக்கும் தாய்

இரண்டே மாதத்தில் கசந்த காதல் திருமணம்.. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு - கண்ணீர்வடிக்கும் தாய்

பிரியங்கா

பிரியங்கா

Ramanathapuram News : காதல் திருமணம் செய்து இரண்டு மாதங்களே ஆன புதுப்பெண் தற்கொலை. வன்கொடுமை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தாய் புகார் மனு.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Ramanathapuram, India

காதல் திருமணம் செய்த இரண்டே மாதத்தில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி பகுதியை சேர்ந்தவர் பிரியங்கா. 10வகுப்பு வரை மட்டுமே படித்த பிரியங்கா பஞ்சுமில்லில் பணியாற்றி வந்துள்ளார். அப்போது ஆவரங்குடியை சேர்ந்த மணிகண்டன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப்பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. பிரியங்கா தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பவர் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு வலுத்துள்ளது.

இதனையடுத்து வீட்டை விட்டு வெளியேறி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துக்கொண்டனர். சாக்கோட்டை காவல் நிலையத்தில் காதல்ஜோடி தஞ்சமடைந்தனர். இருதரப்பினரையும் காவல்நிலையத்துக்கு அழைத்துபேசிய போலீசார் சமாதானம் செய்துவைத்து பிரியங்கா மேஜர் என்பதால் கணவர் மணிகண்டனுடன் அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தன் தாயிடம் பேசிய பிரியங்கா சாதிப்பெயரை கூறி மாமியார் திட்டி அவமானப்படுத்துவதாக கூறி கண்ணீர்விட்டுள்ளார். தன்னை கொடுமைப்படுத்துவதாகவும் இதற்கு கணவரும் உடந்தையாக இருப்பதாக கூறி அழுதுள்ளார். நீ விருப்பப்பட்டு செய்து திருமணம் எனக் கூறி மகளை சமாதானம் செய்துள்ளார்.

நேற்று காலை பிரியங்காவின் செல்போனுக்கு தொடர்புக்கொள்ள முயற்சித்துள்ளார். நீண்ட நேரம் போன் அடித்தும் யாரும் எடுக்கவில்லை. இதற்கிடையில் இளம்பெண் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக அக்கம்பக்கத்தினர் காளையார்கோவில் காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

Also Read:  மாயனூர் காவிரி ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் உயிரிழந்த விவகாரம் : 3 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் உயிரிழந்த பிரியங்காவின் தாய் வனிதா சிவகங்கை எஸ்.பி அலுவலகத்தில் மகளின் சாவில் மர்மம் இருப்பதாக புகார் அளித்தார்.

என் மகளை காதலி திருமணம் செய்துக்கொண்டு சாதிய ரீதியாக திட்டி துன்புறுத்தி வந்துள்ளனர். மகளின் சாவில் மர்மம் இருக்கிறது. இதற்கு காரணமானவர்களின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என புகார் தெரிவித்துள்ளார். காதல் திருமணம் செய்த இரண்டே மாதத்தில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Crime News, Love marriage, Ramanathapuram, Tamil News