ஹோம் /நியூஸ் /ராமநாதபுரம் /

அய்யனார் கோயிலுக்கு நிலம் கொடுத்த இஸ்லாமியர்.. ராமநாதபுரத்தில் நெகிழ்ச்சி!

அய்யனார் கோயிலுக்கு நிலம் கொடுத்த இஸ்லாமியர்.. ராமநாதபுரத்தில் நெகிழ்ச்சி!

நிலம் கொடுத்த இஸ்லாமிய விவசாயி

நிலம் கொடுத்த இஸ்லாமிய விவசாயி

Ramanathapuram | ராமநாதபுரத்தில் அய்யனார் கோயிலுக்கு செல்ல நிலம் கொடுத்து பாதை  வழங்கிய இஸ்லாமிய விவசாயிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram | Ramanathapuram

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கிழக்கு தெருவைச் சேர்ந்த விவசாயி முகம்மது  சுவைஃபு(75). காஞ்சிரங்குடி மேலவலசை கிராமத்தில் உள்ள பொன்னு சிறையெடுத்த அய்யனார் கோயிலுக்கு செல்லும் வழியில் இவருடைய நஞ்சை நிலம் உள்ளது.இந்நிலையில் அப்பகுதி மக்களும் கோயிலுக்கு செல்லும் மக்களும் பாதை இல்லாமல் தவித்து வந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் அக்கோயிலில் வருடம் வருடம் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியும் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அப்பகுதி மக்கள் கோயிலுக்கு செல்லும் மக்கள் நில உரிமையாளரிடம் பாதை வழங்க கோரி பல நாட்களாக கோரிக்கையை விடுத்து வந்துள்ளனர். மக்கள் செல்லும் பாதையில் இடம் இருப்பதாக உணர்ந்த அவர் மனித நேயத்துடன் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாகவும் அனைத்து மக்களும் பயன்படக்கூடிய வகையில் தனக்கு சொந்தமான இடத்தில் இருந்து சுமார் 8 சென்ட் இடத்தை தானமாக வழங்கி அப்பகுதி மக்களின் பெருந்துயரை போக்கியுள்ளார்.

இதையும் படிங்க | ராமநாதபுரத்தில் சிக்கிய ஐஸ் போதை பொருள்.. ரூ.60 கோடி மதிப்பு - கடத்தல்காரர்களின் சதி முறியடிப்பு

இதேபோல காஞ்சிரங்குடி பக்கீரப்பா தர்காவில் இருந்து கடற்கரை ஓரமாக கிழக்கு முத்தரையர் நகர் செல்லும் கிராம மக்கள்  கடற்கரை ஓரமாகவே செல்லக்கூடிய  நிலை இருந்துள்ளது.  மழைக்காலங்களில் கடல் நீர்  உள் புகுவதால் மக்கள் செல்ல முடியாத சூழலில் பெரிதும் அவதி அடைந்த வந்தனர்.

இதனை அறிந்த அவர் மக்கள் பயன்பாட்டிற்காகவும் அரசு போடக்கூடிய தார் ரோட்டுக்காக  நிலத்தில் இருந்து 15 சென்டை தானமாகவும் கொடுத்துள்ளார்.கோயில் மற்றும் பொது பாதைக்காக நிலம் வழங்கிய முகம்மது சுவைஃபுவை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

இதுகுறித்து அவரிடம் கேட்ட பொழுது, ‘நிலம் வழங்கிய பிறகு தினமும் பக்தர்கள் கோயில் வருவதை பார்க்கவே மகிழ்ச்சியாக உள்ளது. வரும் இளைய தலைமுறையினரும் இதுபோல் இந்து, இஸ்லாமியர், கிறிஸ்தவர் என பாகுபாடு இல்லாமல் மத நல்லிணக்கத்தோடு இணக்கமாக சகோதரத்துவத்துடன் வாழ வேண்டும் எனவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

செய்தியாளர்: பொ. வீரக்குமரன், ராமநாதபுரம்.

First published:

Tags: Local News, Ramanathapuram, Tamil News