ஹோம் /நியூஸ் /ராமநாதபுரம் /

அமாவாசை இரவில் நிர்வாண பூஜை.. 8வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - சிக்கிய சாமியார்

அமாவாசை இரவில் நிர்வாண பூஜை.. 8வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - சிக்கிய சாமியார்

சாமியார் கைது

சாமியார் கைது

Ramanathapuram News : ராமநாதபுரத்தில் 8 வயது சிறுமியை  பாலியல் வன்கொடுமை செய்த மாந்திரீக சாமியார் மற்றும் உடந்தையாக இருந்த  சிறுமியின் தாய் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Ramanathapuram, India

  ராமநாதபுரத்தில் செல்வம் பெருக நிர்வாண பூஜை செய்வதாக கூறி 8-வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சாமியார் மற்றும் இந்த கொடூர சம்பவத்துக்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தாயை போலீஸார் கைது செய்துள்ளனர்.

  ராமநாதபுரத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது உறவினருடன் சிவகங்கை மாவட்டம்  திருப்புத்தூர் அருகே உள்ள வேட்டங்குடிபட்டி கிராமத்தில் வசிக்கும்  ராமகிருஷ்ணன் (48)  என்பவரிடம் மாந்திரீகம், குறி பார்க்க சென்றுள்ளார். அப்போது அந்த பெண்ணுக்கும் , மாந்தீரிக சாமியார் ராமகிருஷ்ணணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

  இதன்காரணமாக அந்தப்பெண் அடிக்கடி குறி பார்க்க சென்றுள்ளார். சென்னையில் உள்ள தனது கனவருக்கு சரியான வேலை அமையவில்லை என கூறி குறி பார்த்துள்ளார். அப்போது மாந்தீரிகம் செய்த ரச மணி ஒன்றை அந்தப்பெண்ணிடம் கொடுத்து இதை கழுத்தில் அணிந்து கொண்டால் விரைவில் நீ கோடீஸ்வரி ஆகிடலாம், குடும்ப பிரச்சனை தீரும் என முத்து போட்டு பார்த்து கூறினார்.

  இதையும் படிங்க : கேரளாவில் கொள்ளை அரசுப்பேருந்தில் எஸ்கேப்.. காட்டிக்கொடுத்த சிசிடிவி கேமரா - எல்லையில் மடக்கி பிடித்த தமிழக போலீஸ்

  மேலும் 8 வயது மகளுக்கு அமாவாசை இரவு சிறப்பு பூஜை செய்தால் செல்வம் பெருகும் என கூறி பேச்சால்  வசியம் செய்து  நம்ப வைத்துள்ளார். கடந்த மாதம் காரைக்குடி அருகே உள்ள மானகிரி காட்டு பகுதியில் உள்ள  மாந்திரிக சாமியார் ஆசிரமத்தில் இரவு அமாவாசை பூஜைக்கு 8 வயது சிறுமியை நிர்வாணமாக அமர வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

  இதற்கு சிறுமியின் தாயும் உடந்தையாக இருந்துள்ளார். சம்பவம் குறித்து சிறுமி தனது தந்தையிடம் கூற அவர்  மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் வசம் புகார் தெரிவித்தார். இதனையடுத்து திருப்பத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் ஆத்மநாபன், காவல் ஆய்வாளர் சுந்தர மகாலிங்கம் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு மாந்தீரிக போலீ சாமியார்  ராமகிருஷ்ணன் மற்றும் உடந்தையாக இருந்த பெண் மீது நாச்சியாபுரம் போலீசார் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைந்தனர்.

  செய்தியாளர் : முத்துராமலிங்கம் - காரைக்குடி

  Published by:Karthi K
  First published:

  Tags: Crime News, Local News, Ramanathapuram