ஹோம் /நியூஸ் /ராமநாதபுரம் /

தொண்டியில் பாதியாக குறைந்த மீன்கள் விலை.. கடற்கரை மார்க்கெட்டில் குவிந்த மக்கள்!

தொண்டியில் பாதியாக குறைந்த மீன்கள் விலை.. கடற்கரை மார்க்கெட்டில் குவிந்த மக்கள்!

மீன் மார்க்கெட்டில் குவிந்த மக்கள்

மீன் மார்க்கெட்டில் குவிந்த மக்கள்

Ramanathapuram Fish market crowd | இயல்பாக விற்கப்படும் மீன்களின் விலை பாதிக்கு பாதியாக குறைந்துள்ளதால் அசைவ பிரியர்கள் மீன் வாங்க குவிந்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram | Ramanathapuram | Thondi

தொண்டியில் மீன்களின் விலை குறைந்துள்ளதால் கடற்கரையில் உள்ள மீன் மார்கெட்டில் மீன்கள் வாங்க மக்கள் குவிந்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் பொங்கல் பண்டிகை காலம் என்பதால் மீன்கள், நண்டு, இறால், ஆகியவற்றின் விலைகள் குறைந்துள்ளதால் இராண்டாம் நாளான இன்று மாட்டுப் பொங்கல் தினத்தை அசைவ உணவுகளோடு கொண்டாடி மகிழ தொண்டி கடற்கரையில் உள்ள பேரூராட்சி மீன் மார்கெட்டில் மீன்கள் வாங்க மக்கள் அதிகளவு குவிந்தனர்.

இயல்பாக மீன்களின் விலை கிலோ 600 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில் 350 ரூபாய்க்கும், ரூ.800 விற்கப்படும் பெரிய இறால் ரூ.500க்கும், ரூ.400 விற்கப்படும் சிறிய இறால் ரூ.200க்கும், நண்டு கிலோ 300 ருபாய்க்கும் விற்கப்பட்டது.

இதனால் மக்கள் ஆர்வமாக சென்று மீன்களை வாங்கி செல்கின்றனர். கடற்கரை சாலையின் இருபுறமும் பொதுமக்கள் வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், மார்கெட்டில் உள்ள மீன் கழிவு நீர் வெளியே செல்ல முடியாமல், மார்கெட்டிற்குள்ளேயே தேங்கியுள்ளது. இதனை அகற்ற பேரூராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என மீன் வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

செய்தியாளர்: பொ. வீரக்குமரன், ராமநாதபுரம்.

First published:

Tags: Fish, Local News, Ramanathapuram