முகப்பு /செய்தி /ராமநாதபுரம் / "போதை ஏறி போச்சு" நடுரோட்டில் படுத்து கொண்டு போதை ஆசாமி அட்டூழியம்!

"போதை ஏறி போச்சு" நடுரோட்டில் படுத்து கொண்டு போதை ஆசாமி அட்டூழியம்!

போதை ஆசாமி அட்டூழியம்

போதை ஆசாமி அட்டூழியம்

Ramanathapuram drunkers | ராமநாதபுரத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள மதுக்கடையால் பொதுமக்கள் பலரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Paramakudi, India

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி 5 முனை பகுதியில் மதுக்கடையை திறக்க சில மாதங்களுக்கு முன்பு அனுமதி வழங்கியது. இதனை அடுத்து தினமும் குடிமகன்கள் அப்பகுதியில் குடித்துவிட்டு அட்டூழியங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், அவ்வழியே செல்லும் பள்ளி மாணவ, மாணவிகள், பெண்கள் என அனைவரையும் கேலி செய்வதும் அவர்களுடன் தகாத முறையில் நடந்து கொள்வதும் வழக்கமாகவே உள்ளது.

இதே போல் நேற்று அப்பகுதியில் ஒரு குடிமகன் போக்குவரத்து நெரிசல் மிகுந்த ஐந்து முனை சாலை நடுவே படுத்துக்கொண்டு அட்டூழியம் செய்தது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை கண்ட அப்பகுதிமக்கள் முகம் சுழித்த படி சென்றனர். இதனால் இந்த மதுக்கடையை அகற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர்: கு.தமிழ்ச்செல்வன், பரமக்குடி.

First published:

Tags: Local News, Paramakudi Constituency, Ramanathapuram, Tasmac